பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

241

என்று குறிக்கப்படும் இராசேந்திரன் கைக்கொண்டதாகக் கல்வெட்டொன்று குறித்துள்ளது.

இராசேந்திரன் ஏற்கனவே ‘பஞ்சவன் மாராயன்' என்று தந்தையாரால் பட்டம் சூட்டப்பெற்றிருந்தான். கங்க நாட்டுக்கும் வேங்கை நாட்டுக்கும் உரிய மாதண்ட நாயகன் அல்லது மண்டல ஆட்சித்தலைவனாய் இருந்து பேரரசின் ஆட்சியில் இளமை யிலேயே அவன் பங்கும் பயிற்சியும் பெற்றான்.

இலங்கைப் படையெடுப்பு: 991

இலங்கை அரசன் ஐந்தாம் மயிந்தன் சேரபாண்டிப் போர் களில் எதிர்தரப்பினருக்கு உதவி செய்திருந்தான். ஆகவே இராசராசசோழன் இராசேந்திரன் தலைமையிலேயே ஒரு சோழப் பெரும்படையை இலங்கையைத் தாக்க அனுப்பினான். சோழர் வெற்றிமேல் வெற்றியடைந்து வந்தனர். இதன் பயனாக இலங்கைப் படைவீரர்களிடையே பெருங்குழப்பம் உண்டாயிற்று. இலங்கை வேந்தன் தீவின் பெரும் பகுதியையும் சோழர் வசமே விட்டுவிட்டு, அதன் தென்கீழ்பாலுள்ள மலைப் பகுதியாகிய ரோகணநாட்டுக்கு ஓடிவிட்டான். ரோகண நாடு நீங்கலான தீவு முழுவதும் சோழர் ஆட்சிக்குட்பட்டது.

இலங்கை மன்னர் பழந்தலைநகரான அனுராதபுரம் சோழர் தாக்குதலால் முற்றிலும் அழிந்தொழிந்தது. பல்லவர் அழித்த வாதாபி போல அது இவ்வழிவிலிருந்து எக்காலத்தும் மீண்டும் மீட்சி பெறாமல், இன்றளவும் பாழ் நகராகவே உள்ளது. சோழர் இலங்கை அல்லது ஈழ மண்டலத்துக்கு மும்முடிச் சோழ மண்டலம் என்று பெயரிட்டனர். அதைச் சோழர் ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். அத்துடன் அனுராத புரத்தைப் போலத் தீவின் வடதிசை மையமா யமையாமல் முழுத் தீவின் மைய இடத்திலேயே பொலன்னருவா என்ற புதுநகரம் ஆக்கினர். சோழர் தலைநகராகிய அதுவே பிற்காலங்களில் சிங்கள மன்னர் தலைநகராயிற்று.

சோழர் காலத்தில் சோழர் சிற்ப முறைப்படி கட்டப்பட்ட கோயில்கள் ஈழ மண்டலத்தில் எழுந்தன இது கல்வெட்டுக்களால் தெரிகிறது. அத்துடன் இராசராசன் தஞ்சையில் கட்டிய பெரு