242 ||- ||- -
அப்பாத்துரையம் - 16
வுடையார் கோயிலுக்குச் சோழர் ஆட்சியிலிருந்த ஈழநாட்டு ஊர்கள் சில நிவந்தமாக விடப்பட்டிருந்தன என்று அறிகிறோம்.
பொலன்னருவாக்குச் சோழர் இட்டபெயர் சனநாத மங்கலம் என்பது.குடியாட்சிதழுவி ஆண்டவன் என்ற முறையில் இராசராசனுக்குச் சனநாதன் என்ற விருதுப் பெயர் இருந்தது குடியாட்சிக்குத் தற்போது வழங்கும் புதுப்பெயரான ஜனநாயகம் என்ற தொடரை இவ்வழக்கு நினைவூட்டுகிறது.
மாந்தோட்டம் என்ற இலங்கை நகரம் சோழர் காலத்தில் இராசராசபுரம் என்று பெயர் பெற்றிருந்தது.
கலையூர்ப் போர் 1004
சோழர் படைத்தலைவன் அப்பிரமேயன் என்பவன் கலையூர் என்ற இடத்தில் ஒரு ஹொய்சள மன்னனை முறியடித்தான் என்று தெரியவருகிறது. ஹொய்சள மரபினர் பின்னாட்களில் கங்கர் ஆண்ட பகுதிகளை ஆண்ட வலிமை வாய்ந்த அரசராவர்; ஆனால், இராசராசன் காலத்தில் அவர்கள் மிகச் சிறு மன்னராகவே இருந்திருக்கவேண்டும். அவர்கள் பெயரை நாம் தென்னாட்டு வரலாற்றில் முதல் முதல் கேள்விப்படுவதே இக்கலையூர்ப் போரில் தான் என்று கல்வெட்டாராய்ச்சியாளர் திரு ஸீவெல் குறிப்பிட்டுள்ளனர்.
கலையூர் என்பது தலைக்காட்டருகில் மேற்கு மலைத் தொடர் அடுத்துக் காவிரியின் தென்கரையில் இருந்த ஓர் ஊர்.
சோழ சாளுக்கியப் போராட்டம்; தோனூர்ப் போர்;
1007
பாண்டிய பல்லவர் ஆட்சிக்கால இறுதியில் சாளுக்கிய அரசை விழுங்கி வளர்ந்த புதிய இராஷ்டிரகூடப் பேரரசு சோழப் பேரரசர் ஊழியில் சுந்தர சோழன் ஆட்சிவரை நிலவி, பின் சாளுக்கிய மரபினான தைலப்பன் என்பவனால் வீழ்த்தப்பட்டது. அது முதல் இராஷ்டிரகூடப் பேரரசு ஆண்ட திசையில் மேலைச் சாளுக்கியர் வல்லாட்சி செலுத்தினர். அவர்கள் வடக்கே மாளவ நாட்டை ஆண்ட வல்லரசர் பாரமாரருடனும், தெற்கே சோழ ருடனும் இராசராசன் கால முதல் ஓயாத போராட்டத்துக்கு