தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
(243
ஆளாயினர். சோழப் பேரரசுடன் இறுதிவரை போராடி அதனால் முற்றிலும் விழுங்கப் பெறாமல் இருந்த தென்னாட்டு வல்லரசு அது ஒன்றே. ஆனால், பேரரசின் தளர்ச்சியுடன் அதுவும் தளர்ச்சியுற்றுப் பிற்காலங்களில் வாரங்கல் (பழந்தமிழ் ஓர் அம்கல், ஒரு கல்) நகரிலிருந்து ஆண்ட காததீய மரபினர், வட கலிங்கத்து (ஒரிசா) கஜபதிகள், தேவகிரியாண்ட யாதவர் ஆகியவர் ஆட்சிப் பரப்புக்கு இடம் தந்தனர்.
இராசராசன் காலத்தில் மேலைச் சாளுக்கிய அரசனா யிருந்தவன் இரண்டாம் தைலனின் மகனான சத்தியாசிரயன். அவன் கல்வெட்டுக்களும் தஞ்சைப் பெருவுடையார் கோயில் கல்வெட்டுக்களும் இராசேந்திர சோழனால் நிகழ்த்தப்பட்ட மேலைச் சாளுக்கியப் படையெடுப்பைப் பற்றிக் கூறுகின்றன.
"சோழர் குலத்துக்கு அணியும், சோழன் இராசராச வித்தியாதரனுக்கு மகனும் ஆன நூர்மடிச் சோழ இராசே ராசேந்திர வித்தியாதரன் ஒன்பது இலட்சம் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் படை யெடுத்து வந்தான். பீசப்பூர் வட்டத்திலுள்ள தோனூர் வரை முன்னேறிப் பெரும் போர் ஆற்றினான். நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள், மறையோர் என்றும் பாராமல் கொன்றான். கன்னியரைக் கைப்பற்றிக் கவர்ந்து சென்றான்” - இவ்வாறெல்லாம் சாளுக்கிய ஹோட்டூர் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
தில் சோழரை வித்தியாதரர் என்று கவிதைப் புராண மொழியில் கூறப்பட்டுள்ளது. இது சாளுக்கியர் மனிதரிடம் தோல்வியடையவில்லை, மனித எல்லை கடந்த தேவகணத் தாரிடமே தோல்வியடைந்தனர் என்ற உணர்ச்சியை உண்டு பண்ணுவதற்காகவேயாகும். அழிவும் மிகைப்படுத்திக் கூறப்பட் டுள்ளது.வாசகர் அனுதாபத்தைச் சாளுக்கியரிடம் திருப்புவதற் கான மிகை நவிற்சியுரையே இது என்னலாம். ஆனால், சோழர் தோனூர் வெற்றிக்கு இது சிறந்த சான்று. 'சத்தியாசிரயனை எறிந்து எழுந்தருளி' என்றுமட்டும் தஞ்சைக் கல்வெட்டுக் கூறுகிறது. ஆனால், தோனூர்ப் போரில் படைத்தலைவன் இராசேந்திரன் கட்டளைப்படி சத்தியாசிரயன் ஏறியிருந்த யானையைத் தாக்க முயன்று வீர மாள்வுற்ற வீரன் ஒருவன்
-