பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




244 ||-

அப்பாத்துரையம் - 16

நினைவாகப் பொற்பூக்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வீரன் பெயர் சுருதிமான் நக்கன் சந்திரன் என்ற இராசமல்ல முத்தரையன் என்பது. சோழர்கால வீரர் புலவராகவும், புலவர் வீரராகவும் இருந்தனர் என்பதையும் இச்செய்தி குறித்துக் காட்டுகிறது.

சீட்புலி நாட்டு வெற்றி:991

தெலுங்குச் சோழன் பீமன் ஆண்ட சீட்புலி நாடு,பாகிநாடு ஆகியவற்றைப் பராந்தகன் வென்றிருந்தான், ஆனால், சோழர் தொண்டை நாடிழந்தபின் அது மீட்டும் கைப்பற்றப் பெறவில்லை. இராசராச சோழன் அவற்றைக் கைப்பற்ற எண்ணினான்.991 -ல் அங்கே ஒரு பெரும் படையை அனுப்பினான். படைத்தலைவனா யிருந்தவன் தஞ்சாவூர் வட்டத்துக் காருகுடியுடையான் பரமன் மழபாடியான் என்ற மும்முடிச் சோழன் ஆவன். தவிர, கீழைச் சாளுக்கிய நாட்டை இழந்து அதனை மீட்டும் பெறும் எண்ணத் துடன் சோழன் உதவிநாடி வந்திருந்த சக்திவர்மனும் அதில் ஈடுபட்டிருந்தான். அவ்வாண்டிலேயே வெற்றி ஏற்பட்டு, சீட்புலி நாடும் பாகிநாடும் சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டன.

வேங்கை நாட்டு வெற்றி: 999

பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கீழச்சாளுக்கியர் ஆண்ட வேங்கை நாட்டுப்பகுதியை அம்மராசன், பாடபன் என்ற இருவழியினர் இருபகுதிகளாக ஆண்டுவந்தனர். இருவழியினருக்கும் 925- முதல் ஏற்பட் சச்சரவின் பயனாக, 973-ல் இளையோன் வழியினரான பாடபனும் அவன் தம்பி தாழனும் நாடு முழுவதும் கைக் கொண்டனர். அதனை 27 ஆண்டுகள் ஆண்டனர். மூத்தவழி மரபினரான சக்திவர்மன் சோழனிடம் வந்து அடைக்கலம் புகுந் தான்.991-ல் சீட்புலி நாட்டு வெற்றியில் இச்சமயத்திலேயே அவன் பங்கு கொண்டான்.

999-ல் இராசராசன் சக்திவர்மனுக்கு உதவி செய்யும்படி வேங்கை நாட்டின் மீது படையெடுத்தான். போரில் இளைய மரபினரை வென்று, அவன் சக்திவர்மனையே வேங்கை நாட்டு வேந்தனாக முடி சூட்டினான். அவன் 999-லிருந்து 1011 வரை ஆண்டான். சக்திவர்மன் இளவல் விமலாதித்தான் இராசராசன்