தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
245
புதல்வியான குந்தவைப் பிராட்டியாரை மணஞ் செய்திருந்தான். ஆகவே சக்திவர்மனை முடிசூட்டும்போதே, அவனுக்குப்பின் அரசுரிமை விமாலதித்தனுக்கே என்ற உறுதிப் பெற்று, அவனுக்கே சோழன் சிற்றரசுப் பட்டமும் கட்டிவைத்தான். இதன் பயனாக 1011-ல் சோழ அரசன் மருமகனே கீழைச்சாளுக்கிய மன்னன் ஆனான்.
முதற் கலிங்கப் போர்
கலிங்கம் என்பது கோதாவரியாற்றுக்கும் மகாநதிக்கும் இடையேயுள்ள கடற்கரைப் பகுதி ஆகும். இது கீழைச்சாளுக்கிய நாடான வேங்கைக்கு வடக்கேயுள்ளது. இங்கே கஞ்சம் மாவட்டத்தை அடுத்துள்ள மகேந்திரம் என்ற மலைக் குவடுகளில் பாதி தமிழ் மொழியிலும் பாதி சமஸ்கிருத மொழியிலும் வரையப்பட்ட இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன.அவற்றின் மூலம் இராசேந்திரனும் அவன் மைத்துனன் விமலாதித்தனும் சேர்ந்து குலூதன் என்ற ஓர் அரசனை வென்று, அம்மலையில் வெற்றித் தூண் நிறுவினர் என்று அறிகிறோம். ஆனால், ஆட்சியும் ஆண்டும் அவற்றில் குறிக்கப்படாததால், காலம் கணித்துணர முடியவில்லை. முதலாம் இராசேந்திரன் மெய் கீர்த்தியில் அது குறிக்கப்படவில்லை. ஆகவே அது இராசராசன் காலத்தில், வேங்கை வெற்றிக்குப்பின் நிகழ்ந்திருத்தல் வேண்டும்.
முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் அல்லது மாலத்தீவு இலக்கத் தீவு வெற்றிகள்: 1007
இராசராசன் பெரு வெற்றிகளுள் கடைசியானது முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்னும் தற்கால மாலத்தீவு வெற்றியே யாகும். இத்தீவுகள் தென்னாட்டுக்குத் தென் மேற்கேயும், இலங்கைக்கு மேற்காகவும் இலக்கத் தீவத்துக்கு தெற்காகவும் இருக்கின்றன.. தென்னாட்டுக் கடற்கரையிலிருந்தும், இலங்கைக் கடற்கரையிலிருந்தும் பன்னூற்றுக் கணக்கான கல் தொலைவில், கடல் நடுவில் அத்தீவுக்குழு அமைந்துள்ளன. முற்காலத்தில் அது ஒரு மலையாளக்கரை இஸ்லாமிய மன்னன் ஆட்சியிலும், தற்போது இலங்கை ஆட்சியிலும் இருக்கின்றது.
தமிழ் நிலத்துக்கு வடக்கே கன்னடம், தெலுங்கு முதலிய தமிழ் திரிந்த, தமிழினத் திசைமொழிகளுடனே தெற்கேயும் தமிழ்