பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

247

System) இலக்கத்தீவு, மாலத்தீவுப் பழங்குடியினத்தின் மொழியில் இருப்பதாக மொழி நூலறிஞர் கூறுகின்றனர்.

பழந்தீவு கடல் நடுவில் பல கல் தொலைவில் கடந்திருந்த தால், பெருங்கப்பல்கள் அடங்கிய கப்பற்படை கொண்டே அதைத் தாக்க முடியும். இருபதாம் நூற்றாண்டின் இயந்திர முன்னேற்றங்களிடையேகூட து ஒரு பெருங்கடற்

செயலேயாகும். இத்தகைய போரை நடத்தத் தக்க முறையில் சோழரிடம் சேரரைப்போலவே ஆற்றல் மிக்க கடற்படை இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. வெற்றிக்குப்பின் இந்நடைமுறையிலும், இதனிலும் விரிவான கடார வெற்றியிலும் கடல் வாழ்வில் தீறமுடைய சேரநாட்டுக் கடற்படை வீரரும் காந்தளூர்ப் போருக்குப்பின் சோழருக்கு உதவியிருத்தல் இயல்பே.

இலக்கத் தீவங்கள் என்று இந்நாளில் குறிக்கப்படும் தீவக் கூட்டங்களும் சோழர் காலங்களில் மாலத்தீவின் ஆட்சியிலேயே இருந்தன. ஆகவே சோழர் பழந்தீவு பன்னீராயிரத்தின் வெற்றி னே இலக்கத்தீவங்களின் வெற்றியும் இணைந்துள்ளது என்று தெரிய வருகிறது.

யுட

இராசராசன் பாரிய வெற்றித் தொகுதி

ஆட்சித்திறத்தை ஒதுக்கி வைத்தால்கூட, இராசராசன் வெற்றிகள் மட்டுமே ஓர் ஆட்சியில் எந்தப் பேரரசனும் கண்டிராத அளவு வியக்கத்தக்க வெற்றிகள் ஆகும் என்று துணிந்து கூறலாம். உண்மையில் ஹானிபல், சீசர், அலக்ஸாண்டர், நெப்போலியன் ஆகியோர் வெற்றிகளுடன் ஒப்பிட்டால் கூட, அது எவ்வகையிலும் மதிப்புக் கெடுவதல்ல, அவற்றை விஞ்சுவதேயாகும். ஆனால், அவன் மெய்க்கீர்த்தி ஏதோ, ஒரு சிற்றரசன் வெற்றிகளைத் தொகுத்துச் சொல்லும் பாணியில் சுருக்கமாகவே உள்ளன.

66

"காந்தளூர்ச்சாலை கலமறுத் தருளி, வேங்கைநாடும், கங்கை பாடியும்,

தடிகை பாடியும், நுளம்ப பாடியும், குடமலை நாடும், கொல்லமும், கலிங்கமும்,