பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




248 ||

அப்பாத்துரையம் - 16

முரண் தொழில் சிங்களர் ஈழமண்டலமும்,

இரட்டபாடி ஏழரை இலக்கமும்,

முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் கொண்டு, தன்

எழில்வளர் ஊழியுள் எல்லாயாண்டும்

தொழுதக விளங்கும்யாண்டே, செழியரைத் தேககொள் கோராச கேசரிவர்மன்...

வெற்றிகளுள் வியத்தகு வெற்றியாக இங்கே குறித்திருப்பது வடதிசை வெற்றிகளையோ, கடல் கடந்த வெற்றிகளையோ அல்ல. அவை எல்லாம் ஒவ்வொரு ஆண்டு வெற்றிதான் என்றும், ஆட்சி முழுவதும் வென்று பெற்ற வெற்றி செழியரை அல்லது பாண்டியரை வென்று தேசு அதாவது புகழ் அழித்த வெற்றியே என்று இங்கே குறிக்கப்பட்டிருப்பது வியத்தற்குரியது. அக்காலத்திலும் தமிழரின் பெரும் பகைவர் தமிழரே என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பின்னாளில் சோழப்பெரும் பேரரசை மீண்டும் வென்ற பேரரசர் பாண்டியரே என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.

வாணகப்பாடி ஆண்ட தலைவருக்கு வானவன் என்றும், பாண்டி நாடாண்டவர்கட்கு மீனவன் என்றும், சாளுக்கியர் கீழ்ப்பட்டிருந்த பகுதி ஆண்டவருக்கு வல்லவர் என்றும், தென் பாண்டி நாடாண்டவருக்குத் தென்னவர் என்றும், கங்க நாடு ஆண்டவர்கட்குக் கங்கர் என்றும், இலங்கை நாடாண்டவர்கட்கு லங்கேசன் என்றும், தொண்டை நாடாண்டவர்க்குப் பல்லவர் என்றும் பட்டங்கள் வழங்கிய அழகும், ராசராச வளநாடு

(பாண்டி), மும்முடிச் சோழ மண்டலம் (இலங்கை), ஜெயங் கொண்ட சோழ மண்டலம் (தொண்டை நாடு) ஆகிய மண்டலப் பெயர்களும் இராசராசன் ஆட்சிக்குரிய அரசியல் தமிழ் வளம் காட்டும் தொடர்கள் ஆகும்.

கண்கண்ட தமிழக வெற்றி உலாவீரன்:

பாண்டி நாட்டில் பிறந்தவர்கள் தமிழ் வளர்த்த தண்ணளிப் பாண்டியர் பற்றி ஏனையவரினும் பெருமைப்படலாமானால், அத்தமிழுக்கு வானளாவிய பரிசில்கள் வழங்கிய தம்வானவர் ஏந்தல்கள் பற்றிச் சேர நாட்டில் பிறந்தவர்களும், அத்தமிழர் முழு