பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

249

வீறுகாட்டி உலகில் தமிழர் இனப்பெருமையைப் பொறித்த அணியணியான பெருஞ் சோழர் பட்டிகை காட்டிச் சோழ நாட்டில் பிறந்தவரும் தத்தம் தனிப்பெருமை கொண்டாடலாம்! முத்தமிழ் நாடாக விளங்கிய பண்டைத் தமிழரசுகள் ஒத்த தமிழ் நாடுகளாகவே திகழ்ந்த முத்திறத் தேசியங்களே என்னலாம்.

இம் முத்திசைத் தேசியங்களின் போட்டியாலேயே பண்டைத் தமிழகம் கிட்டத்தட்ட அழிந்து, அதன் மறுமலர்ச்சியாகத் தோன்றிய இடைக்காலத் தமிழகமும் கிட்டத்தட்டத் தன் பெருமை சீர் குலைக்கப் பெற்று நலிந்துள்ளது என்னலாம். இன்றுகூடத் தமிழர் தமிழருடன் ஆற்றும் போட்டியே தமிழகத்தையும் அடிமைக் குழியில் அமிழ்த்தி வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தவறாகாது.

இராசராசன் வரலாறு மட்டும் படித்த எவரும் இதற்கு மேல் ஒரு வீர மன்னன் வெற்றியைக் கற்பனையிலும் புனைந்து காணல் அரிது என்று கருத இடமுண்டு. ஆனால், அவனைக் கடந்த வெற்றி வீரனாக விளங்கியவன் அம் மும்முடிச் சோழன் பெற்ற வெற்றிக்களிறாகிய இராசேந்திரனே! இராசேந்திரன் இராசராசன் மகனாக, அவனை அடுத்து ஆண்டபெருஞ் சோழனாயிராவிட்டால், பெருஞ் சோழர் வரிசையில்கூட அவனுக்கு இடம் போதாது. அவன் வெற்றிகள் சோழகமும் தமிழகமும் கண்டிராத, இன்றுகூடக் கனவு காணாதவெற்றி என்னலாம். அவன் புகழில் பெரும்பாதி தந்தையாட்சியில் தந்தை புகழில் புதையுண்டுவிட்டாலும் தந்தை தனிப்புகழோ அவன் தனிப்புகழோ அதனால் குறைபடவில்லை. இரண்டும் சோழப் பெருமரபின் இரு வேறு திசைப் புகழாகவே இயல்கின்றன.

கற்பனையுலகில் தமிழர் கனாக் கண்ட விக்கிராமதித்தன் வெற்றி முழுதும் கட்டுக் கதையல்ல; இராசேந்திரன் வெற்றியின் ஒரு நிழலே என்று கூறலாம்.

முதலாம் இராசேந்திரன் பட்டத்துக்கு வந்த ஆண்டிலேயே முதலாம் இராசராசனின் வெற்றிகளின் பயனாகச் சோழப் பேரரசின் எல்லை தற்காலத் தமிழகம் முழுவதையும் தற்காலக் கேரளம், ஆந்திரம் ஆகியவற்றையும் கன்னடத்தின் தென்பால் உள்ள பெரும் பகுதியையும் கிட்டத்தட்ட இலங்கை முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அதை இமயம் வரை, கடாரம் வரை