பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(250

அப்பாத்துரையம் - 16

கொண்டு சென்று, நெடியோனது பழம் பாண்டித் தொல் கனவைச் சோழரின் புது நனவாக்கியவன் இராசேந்திரனே

யாவன்.

சோழ சாளுக்கியப் போராட்டம்:

இடைதுறை நாடு வனவாசி பன்னீராயிர வெற்றி: கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக வெற்றிகள்: 1008

இராசேந்திரன் காலத்துக்குரிய சோழ சாளுக்கியப் போராட்டத்தின் முதற் பெருங்கட்டம் அவனது மூன்றாவது ஆண்டு மெய்க் கீர்த்தியிலேயே இடம் பெறுகிறது. ஆகவே அதன் பெரும்பகுதி அவன் இளவரசனாவதற்கு முன்னோ பின்னோ இராசராசன் ஆட்சிப் பகுதியில் நிகழ்ந்த செயல்களாகவே இருக்க வேண்டும். இப்போரில் இராசேந்திரன் எதிரியாகக் குறிக்கப்படும் மன்னன் சத்தியாசிரயன் ஆட்சி 1008-ஆம் ஆண்டுடன் முடிவதால், இவையும் அவ்வாண்டுக்கே உரிய செய்திகள் ஆக வேண்டும்.

இவ்வெற்றிகளுக்குரிய இடங்களில் இடைதுறை நாடு என்பது சாளுக்கிய கல்வெட்டுக்களில் இடத்தோர் இரண்டாயிரம் என்று குறிக்கப்படும் நிலமே. அது கிருஷ்ணா, துங்கபத்திரா ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம் ஆகும். தற்போது அது பம்பாய் மாகாணத்திலுள்ள இரேய்ச்சூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதி ஆகும். இது போல வனவாசி என்பது கல்வெட்டுக்களில் வனவாசி பன்னீராயிரம் எனப்படுவது ஆகும். அது மைசூரின் வடமேற்குப் பகுதியும் அதற்கு வடக்கிலுள்ள கோவாப்பகுதி அல்லது வடகொண்கானக் கரையும் சேர்ந்த

து

டமாகும். பண்டைச் சேரர்காலத்தில் அது கடம் பர்களின் தாயகமாய் இருந்தது. பின்னாட்களில் அது வாணர்கள் அல்லது பாணர்களின் தாயகமாயிற்று, வனவாசி என்ற பெயர் பாணவாசி, பனவாசி என்பவற்றின் மருஉவே.

கொள்ளிப்பாக்கை என்பது ஒரு நகரம். அதுவே பின்னாட் களில் பாமினி மரபினரின் தலைநகரமாகக் குல்பர்கா என்ற பெயர் பெற்றிருந்தது. சோழர் காலத்திலும் அது கொள்ளைப்பாக்கை ஏழாயிரம் என்ற பரப்பின் தலைமை நகரமாகவே இருந்தது. அந்நகரம் தற்கால ஹைதராபாத் நகருக்கு நாற்பத்தைந்து கல் வட