பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

251

கிழக்கிலுள்ளது. சாளுக்கியர் பேரரசிலும் அது துணைத் தலை நகரமாய் இருந்தது.

மண்ணைக்கடக்கம் என்பது இராஷ்டிரகூடப்பேரரசுக்கும், அதைத் தொடர்ந்து இராசேந்திர சோழன் காலம் வரை இருந்த மேலைச் சாளுக்கியருக்கும் உரிய தலைநகரமேயாகும். அது அக்காலத்தில் மானியகேதம் என்றும் வழங்கிற்று. இந்நாளில் அது மால்கேட் என்றும் வழங்கப் பெறுகிறது.

இவ்வெற்றிகளால் மேலைச் சாளுக்கியப் பேரரசின் தென் பகுதியான வனவாசியும், இரட்டபாடி ஏழரை இலக்கமும் சோழப் பேரரசில் இணைந்தன. கொள்ளிப் பாக்கைப் போரே இப்பெரும் பரப்பை வசப்படுத்தப் பெரிதும் உதவியிருக்கக் கூடும். சாளுக்கியரின் தென் தலைநகரான அந்நகரம் இப்போரில் முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆனால், சோழர் தென்திசை வெற்றியுடன் நில்லாமல் தலைநகரான மண்ணைக் கடக்கத்தையும் அழித்தனர். சோழரால் அழிவுற்றபின் அது கிட்டத்தட்ட வாதாபி, அனுராதபுரம் கதியை அடைந்தது. ஏனெனில் அது மீண்டும் சாளுக்கியப் பேரரசின் தலைநகராகவோ, வேறு எந்தப் பேரரசின் தலை நகராகவோ அமையவில்லை. மேலைச்சாளுக்கியர் அதன் பின் மண்ணைக் கடகத்துக்கு நாற்பத்தெட்டுக் கல் வடகிழக்கிலுள்ள கலியாண புரத்தைத் தம் புதுத் தலைநகராக்கிக் கொண்டனர்.

இராசேந்திரன் வென்ற சாளுக்கியப் பேரரசின் பகுதிகளில் துங்கபத்திரைக்குத் தெற்கிலுள்ள பகுதியே நிலையாகச் சோழப் பேரரசில் இருந்தது. இடைதுறை அல்லது இரேய்ச்சூர்ப் பகுதியைச் சாளுக்கியர் விரைவில் மீட்டு வெற்றிபெற்றனர் என்பதை அங்குள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. ஆனால், துங்கபத்திரை ஆறு மேலைச் சாளுக்கிய, சோழப் பேரரசுகளின் நிலையான இடையெல்லையாயிற்று.

"நெடிதுஇயல் ஊழியுள் இடைதுறைநாடும், தொடர்வன வேலிப் படர்வனவாசியும் சுள்ளிச்சூழ்மதில் கொள்ளிப்பாக்கையும் நண்ணற்கு அரு முரண்மண்ணைக் கடக்கமும்”