தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
253
என இவ்வெற்றிகளை இராசேந்திரன் மெய்க்கீர்த்திகள் விளக்கமாக அறிவிக்கின்றன.
ஈழவெற்றிக்குப்பின் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை இலங்கை மகாவம்சோ குறித்துள்ளது.
சிறைப்பட்ட இலங்கைவேந்தன் சோழருக்குப் பணிந்து சோணாட்டிலேயே 1029 வரை வாழ்ந்தான். ஆனால், இலங்கை மக்கள் சிலர் சோழருக்குத் தெரியாமலே அவன் புதல்வன் காசி பனை மறைவில் வைத்து வளர்த்து வந்தனர். தந்தை இறந்தபின் அவன் தன் ஆதரவாளர் உதவியால் படைதிரட்டிச் சோழ நாட்டை வென்று, விக்கிரமபாகு என்ற பெயருடன் அப்பகுதியை 1029 வரை ஆண்டான்.
பாண்டிய, சேரநாட்டு நிகழ்ச்சிகள் 1018, 1019
சில கல்வெட்டுகள் இராசேந்திரன் சேரநாட்டில் படை யெடுத்தானென்றும், திருவாலங்காட்டுச் செப்பேடுகள் அவன் பாண்டிநாட்டிலும் பாண்டியனை ஒட்டி நாட்டைக் கைப்பற்றினான் என்றும் கூறுகின்றன. ஆனால், விளக்கமற்ற குறிப்புக்கள் ஆகும்.புதுச்சேரியடுத்த இராசேந்திரன் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றே அதை விளக்கமாகக் கூறுகிறது.
நாட்டாட்சி இழந்த பாண்டிய மரபினர் அடிக்கடி வெளி வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். இதனை ஒழிக்க இராசேந்திரன் ஒரு புதுத்திட்டம் வகுத்தான். கிளர்ந்தெழுந்த பாண்டியனை ஓட்டியபின், அவன்தன் மக்களுள் ஒருவனையே பாண்டி நாட்டில் தன் அரசப் பிரதிநிதியாக நிலையாக அமர்த்தி விட எண்ணினான். இப்புதல்வனுக்கு அவன் சோழ பாண்டியன் என்ற பதவிப் பட்டத்துடன், பாண்டியன் மரபுப்படி சடையவர்மன் என்ற ஆட்சிப் பெயரையும் சேர்த்து, சடையவர் மன் சுந்தர சோழ பாண்டியன் என்ற விருதுப் பெயர் அளித்தான்.
சோழர் மாறிமாறிப் பரகேசரி, இராகேசரி என்று தொடர்ச் சியாக ஆட்சிப் பட்டம் கட்டிக்கொண்டது போல, பாண்டியரும் மாறவர்மன், சடையவர்மன் என்று மாறிமாறிப் பட்டம் கட்டிக் கொண்டு வந்தனர். தன் மகனையே சடையவர்மன் என்ற பட்டம்