(256
கேசரிவர்மன்
அப்பாத்துரையம் - 16
என்ற அவன் நீண்ட விருதுப்பெயர்
இவ்வெற்றிகளை ஒரே தொடர் வெற்றியாகக் குறித்துள்ளது. இவை கூட அவன் ஆட்சியில் ஐந்து ஆண்டுகட்கு மேல் பிடிக்க வில்லை என்பது வியப்புக்குரிய செய்தியாகவே உள்ளது. ஏனெனில் அது வடதிசையில் கங்கை வரை சென்று அடைந்த பல நில வெற்றிகளையும், அதன்பின் கடல் கடந்து கடாரம் வரை சென்று அடைந்த பல கடல் வெற்றிகளையும் உள்ளடக்கு கின்றது. வடக்கு வெற்றி 1022-1028 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் கீழ்திசை வெற்றி 1025 ஆம் ஆண்டிலும் முடிவு பெற்று விட்டதாகத் தோன்றுகிறது.
இவ்விரு வெற்றிகளைப்பற்றித் தமிழர் அந்நாளிலேயே பெருமை கொண்டிருந்தனர் என்பதில் ஐயமில்லை. கல்வெட்டுக் கள் சற்று விளக்கமாகவே இருந்தாலும், மற்ற வெற்றிகளைப் போல இவற்றையும் தொகுத்தே கூறுகின்றன. விளக்கம் தருவதற் குரிய இலக்கியங்களும் இக்காலப் பிரிவுக்குக் குறைவே. சுந்தர சோழன் கால இலக்கியம்போல இக்கால இலக்கியமும் மிகுதி அழிவுற்றிருக்கலாம். கலிங்கத்துப் பரணியோ, மூவருலாவோ தொல்பழ நிகழ்ச்சிகளாகவே, இவற்றையும் குறித்துச் செல்கின்றன. வெளிநாட்டுப் புறச்சான்றுகளே இவற்றைத் துலக்கப் பெரிதும் உதவியுள்ளன. ஆனால், போதிய அளவு வட இந்திய வரலாறோ தென் கிழக்காசிய வரலாறோ ஆராய்பவர் இவ்வகையில் உதவ முடியவில்லை. ஏனெனில் அவர்கள் கீழ்த்திசையிலேயே பொதுவாகவும், தமிழினத்திலே சிறப்பாகவும் அக்கரையற்றவர்கள். நாட்டு மக்கள் சார்பில் நின்று வரலாற்றை நோக்காமல், அயலினத்தவர், அயல்நாட்டவர், மேனாட்டவர் கண்கொண்டு அயலார் வரலாறாகவே அதைக் காண்பவர்கள் ஆகியுள்ளனர்.
வடதிசைச் சிந்து கங்கைவெளி வரலாறு சிறப்பாகப் படை யெடுப்பாளர், அயலாட்சியாளர் வரலாறாகவே கருதப்பட்டு வருகிறது. கஜினிமாமூது பதினெட்டுத் தடவை படையெடுத்துக் கோயில்களை இடித்துக் கோயில் செல்வங்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டி ஆராயும் வடதிசை ஆராய்ச்சியாளர், அதேசமயம் நடைபெற்ற, ஒருவேளை கஜினி மாமூதின் படையெடுப்புடனேயே மோதிக்கொண்ட சோழப்