தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
257
படையெடுப்பில் மட்டும் அக்கரை காட்டாதிருப்பது வியப்புக்குரிய செய்தியேயாகும்.
ல்
வடதிசைப் படையெழுச்சிக்குப் பெயரளவில் காரணமாகக் கூறப்படுவது.புதிய சோழர் தலைநகரான கங்கை கொண்ட சோழ புரத்தைத் திருநிலைப்படுத்துவதற்குக் கங்கை நீர் கொண்டுவர இராசேந்திரன் விரும்பினான் என்பதே, இவ்வகையில் பண்டை முத்தமிழ் அரசர் போல, கரிகாலனைப் போல, வெற்றி வீரனாக உலாவரவேண்டும் என்ற ஆர்வமே முதன்மையாய் இருந்திருத்தல் கூடும். இவற்றைத் தாண்டிய நெடியோன் புகழ் அணிமைக் காலத்தில் மறக்கப்பட்டிருப்பினும், அன்று உயிர் மரபாய் இலங்கி யிருக்கக்கூடும். ஏனெனில் நெடியோன் காலத்திலிருந்து தென் கிழக்காசியாவில் 'சிரீமாறமரபு' அன்றுவரையும், 16-ஆம் நூற்றாண்டு வரையும் நிலவிற்று என்று அறிகிறோம். வடதிசை நில வெற்றி உலா மட்டிலுமன்றிக் கீழ்திசைக் கடல்வெற்றி உலாவிலும் இந்நெடியோன் புகழே அவனைத் தூண்டியிருக்கக் கூடும். மெய்கீர்த்தி தரும் வடதிசை வெற்றிப் பட்டியல் மிக நெடு நீளமானதாகும். தனித்தனி வெற்றிகளைக் காண்பதன்மூலம் அதனை கருத்தில் கொள்ளுதல் நலமாகும்.
விக்கிரமவீரர் சக்கரக்கோட்டமும்,
முதிர் படவல்லை மதுரை மண்டலமும் காமிடை வளைஇய நாமணைக் கோணமும், வெஞ்சினவீரர் பஞ்சப் பள்ளியும்,
பாசடைப் பழன மாசுணி தேசமும்
அயர்வில் வண்கீர்த்தி ஆதிநகர் அகவையில் சந்திரன் தொல்குலத்து இந்திரரதனை
விளை அமர்க்களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத்தொடுநிறை குலதனக்குவையும், கிட்டரும் செறிமிளை ஒட்டவிஷயமும், பூசலர்சேரும் நற் கோசலநாடும், தன்மபாலனை வெம்முனை அழித்து வண்டுஉறைசோலை தண்டபுத்தியும், இரணசூரனை முரண்அறத் தாக்கித்
திக்கு அணை கீர்த்தித் தக்கணலாடமும்