பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(258

||- -

கோவிந்த சந்தன் மாஇழிந்து ஓடத்

தங்காத சாரல் வங்காளதேசமும் தொடுகழல் சங்குகொடு அடல் மகிபாலனை வெஞ்சமர் வளாகத்து அஞ்சுவித் தருளி ஒண்திறல் யானையும் பெண்டிர் பண்டாரமும், நித்தில நெடுங்கடல் உத்தரலாடமும்

வெறிபுனல் தீர்த்தத்து எறிபுனல் கங்கையும்

அப்பாத்துரையம் - 16

இதில் நாட்டுப் பெயரும் நகரப் பெயருமாக 12-ம், அரசர் பெயர்களாக 3-ம் தரப்பட்டுள்ளன.

இக்காலம் தென்னாட்டளவு வடநாட்டில் நாட்டாட்சி முறைகளோ, வரலாறோ பெரிதும் இல்லாத காலம். அத்துடன் மேனாட்டு, வடநாட்டு ஆராய்ச்சியாளர்கள்

இந்தப் பெயர்களைத் தென்னாட்டு எல்லையருகிலேயே தேடவேண்டும் என்பதிலே முழுக்கவனம் செலுத்தியுள்ளனர். இக்கால வடநாடு தென்னாட்டுத் தொடர்பை உணர்ந்து விளக்க இவை பெருந்தடைகளாய் உள்ளன. வடநாட்டு மக்களும் தென்னாட்டு மக்களும் வேறுவேறு இனத்தவர். வெறுவேறு நாகரிகத்தவர் என்ற உள்ளார்ந்த கருத்தும், அவற்றுள் தென்னாட்டு மக்களும் மக்கள் இனமரபும் துடைக்கப்பட வேண்டும் என்ற ஆர்வமுமே இவற்றுக்கு வாய்விடாக் காரணங்களாக உள்ளன.

இச்சூழல்களிடையே வரலாற்றாசிரியர்கள் தரும் ஒளியே கூட இராசேந்திரன் வெற்றிகளின் அளவை விளக்க ஓரளவு போதியன என்னலாம்.

வடதிசைப்போர் 1. சக்கரக் கோட்டப் போர்:

சோழர் காலத்துக்கு நெடுங்கால முற்பட்ட உரை மேற்கோள் பாடல்களிலேயே சக்கரக்கோட்டம் என்ற பெயர் காணப்படுகிறது. அத்துடன் தமிழகத்திலுள்ள இடப்பெயர், மலைப்பெயர். ஊர்ப் பெயர்கள் பல கலிங்கப்பகுதியிலும் வங்கத்திலும் சிந்து ஆற்றங்கரையிலும் மிகப் பழங்காலத்திலிந்தே காணப்படுகின்றன. இவற்றின் தொடர்பு இன்னும் விளங்கவில்லை. இவை நெடியோன் காலத்திற்கு இப்பாற்பட்ட தொடர்புகளா