260
||--
அப்பாத்துரையம் - 16
கிடக்கும் மகாகோசலம் அல்லது தென்கோசலம் என்று ஆராய்ச்சியாளர் ஊகிக்கின்றனர்.
இப்போர் வெற்றியிலேயே இந்திரரதன் முறியடிக்கப் பட்ட தாகவும் அறியப்படுகிறது. தென் கோசலமும் ஒட்டர தேசமும் ஆண்டவன் அவனே எனவும் கணிக்கப்படுகிறது.தாரா நகரத்தை ஆண்டபேரரசன் தன் எதிரிகளுள் ஒருவனாகக் குறிக்கும் இந்திரர தனே இவனாயிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் சிலர் ஊகிக்கின்றனர்.
வடதிசை வெற்றி 3. தண்டபுத்திப் போர்
தண்டபுத்திப் போர் கங்கையாறு கடந்தபின் நடை பெற்றது. கங்கையாற்றினுள் வரிசையாக யானைகளைப் பாலம் போல நிறத்தி அவற்றின்மீதே சோழப் படைகள் ஆற்றைக் கடந்தன என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
த ண்டபுத்தி என்பது தற்கால வங்க மாகாணத்தின் மிதுனபுரி மாவட்டப்பகுதி என்று கூறப்படுகிறது. அதனை ஆண்டவன் தர்மபாலன்.
வடதிசை வெற்றி 4. தக்கணலாடம்
கங்கையின் தென்புறமுள்ள வங்க, பீகார்ப் பகுதிகளின் ஒரு கூறு இது என்று கருதப்படுகிறது. இதனை ஆண்டவனே இரணசூரன். கூர்ச்சரத்தின் (குஜராத்தின்) தென்பகுதி இது என்பாரும் உண்டு.
வடதிசை வெற்றி 5. வங்காள தேசம்
இதனை ஆண்டவன் கோவிந்தசந்தன் அல்லது கோவிந்த
சந்திரன்.
வடதிசை வெற்றி 6. உத்திரலாடம்
உ
இது கடற்கரையிலிருந்தது; இதையும் கங்கைக்குத் தென் கரையிலுள்ள பகுதியே என்பர் ஆராய்ச்சியாளர். இதனைக் கூர்ச்சரம் (குஜராத்) வடபகுதி என்பவரும் உண்டு.