பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

261

'தொடுகடல் சங்கு கொட்டல் மகிபாலனை' என்ற மெய்க் கீர்த்தி வரியைச் ‘சங்குக் கோட்ட மகிபாலனை' என்று வாசிக்க நேர்ந்ததன் மூலம் ‘சங்குக் கோட்டப் போர்' என்று ஒரு போரைக் கருதியுள்ளனர். திருசீவெல் முதலிய வெளிநாட்டு ஆசிரியர், இடை மிகும் ஒற்றுக்கள் தமிழ்த் தொடர்களைச் சரி வரப் பிரிக்க எவ்வளவு உயிர்நிலையுதவிகள் என்பதைத் தமிழர் இங்கே

காணலாம்.

உத்தரலாடத்தை ஆண்டவன் மகிபாலன்.

இந்நாடுகள், அரசர்கள் பெரிதும் சிறு நாடுகள், சிற்றரசர்களே. ஆனால், கடைசி அரசனான மகிபாலன் மட்டும் பேரரசன். சோழ வீரர் இந்தச் சிற்றரசர்களை யெல்லாம் வென்ற பின் பேரரசனையே தாக்கி வென்றனர்.

இந்நாடுகள் அனைத்திலும் பெருந்திரளான பொருட் குவையும் வெற்றிச் சின்னங்களும் கவர்ந்து கொண்டு சோழர் அவ்வரசர்கள் பலரையும் சிறைப்படுத்தி ட்டுச் சென்றனர். கங்கையில் நீராடியபின், கங்கை நீரைக் குடங்களில் நிரப்பிச் சிறைப்பட்ட அரசர்கள் தலையில் ஏற்றி, அவற்றைச் சோணாட்டுக்கு கொண்டு வந்தனர்.

இப்படையெடுப்பை நடத்திய படைத் தலைவனைச் சோழப் பேரரசன் இராசேந்திரன் கோதாவரிக் கரைவரை சென்று எதிர் கொண்டு சோணாட்டில் புதிதாகக் கட்டப்பட்ட தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அரச மதிப்புடன்

ட்டுச் சென்றான். வடதிசையின் மன்னர் தலையிலுள்ள கங்கை நீர்க்குடங்களால் நகரின் கோயிலும் நகரமும் திருநிலைப் படுத்தப் பட்ட பின், அந்நீர் நகரின் அருகே பத்துக் கல்நீள அகலமுடைய தாகக்கட்டப்பட்ட சோழகங்க ஏரியில் சேர்க்கப்பட்டன.

கங்கைகொண்ட சோழபுரம் இராசேந்திரன் கால முதல் இறுதிச் சோழப் பேரரசன் மூன்றாம், இராசராசன் காலம் வரையும் தலைநகராகவே இருந்தது. ஆனால், இப்போது அது முற்றிலும் பாழடைந்து கிடக்கிறது அது பெரிதும் பாண்டியப் பேரரசர் படையெடுப்புகளின் போதே அழிக்கப்பட்டிருக்கக் கூடும். ஆனால், வேளாண்மைக்குப் பெரிதும் பயன்பட்டு வந்த சோழகங்க ஏரி பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்வரை கட்டுக்