பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

263

மகிபாலன் பேரரசாட்சி கன்னோசி வரை எட்டியிருந்தது. ஆகவே வடமதுரை அதன் மேற்கு எல்லையிலேயே இருந்தது. சோழன் வெற்றிகள் அனைத்தையும் தென்னக எல்லையடுத்தே கண்டுவிடும் ஆர்வம் வரலாற்றாசிரியர்கள் கண்களைப் பெரிதும் மறைத்து வந்துள்ளது. அவ்வெற்றிகளுட் பல கஜினியின் படை யெடுப்புடன் கைகலக்கும் வரை வடக்கும் மேற்கும் சென்றிருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சோழர் தக்ஷிணலாட உத்தரலாட வெற்றி கூர்ச்சர வெற்றியாகவே இருத்தல் கூடும். மதுரை மண்டல வெற்றி வடமதுரையாகவும் இருக்கலாம். சோழனுக்கு முன்னோ பின்னோ கஜினிமாமூதும் இதே பகுதியைக் கொள்ளையிட்டிருக்கலாகும். ஏனெனில் வட திசை யரசர்கள் இருபடை யெடுப்பாளர்களையும் எதிரெதிராக்கிப் பாதுகாப்புத்தேட முயன்றனர் என்பதை ஒரு வரலாற்றாசிரியர்கள் சுட்டிச் சென்றுள்ளனர்.

கன்னோசிப் போர் 1035

சில

கஜினியின் படையெடுப்பு கன்னோசிக்கு இப்பால் வர வில்லை. கன்னோசி மகிபாலன் ஆட்சிக்கு உட்பட்டேயிருந்தது. 1023 லேயே சோழனிடம் தோல்வியுற்ற மகிபாலன் இதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. தன் மேலூரிமையாளன் உதவி யுடனேயே அவன் இப்படையெடுப்புத் தன் பேரரசின் எல்லை கடவாமல் தடுத்திருக்க வேண்டும். சோமநாதபுரம் கோயிலை விடக் காசிக் கோயில் அந்நாள் செல்வ வளத்திலும் புனிதத் தன்மையிலும் குறைந்ததன்று. அதன் பக்கம் கஜினி மாமூது நாடாதது இதனைச் சுட்டுகிறது. 1035-ல் வடதிசையரசர் தலைமையில், மகிபாலன் மகிபாலன் சோழன் துணையுட துணையுடனேயே கஜினிமாமூதைத் கடைசித் தடவையாக கடைசித் தடவையாக முறியடித்துத் துரத்தியிருந்தான்.

இப்போர் சோழன் கடல் கடந்த வெற்றிகளுக்குப் பிற பட்டதாதல் வேண்டும். ஏனெனில் அவ்வெற்றி 1023-க்குள் முடிந்து விட்டது. வடதிசைவெற்றியினும் பரந்தபுகழ் பெற்ற சோழருக்குக் கன்னோசி வெற்றி ஒரு வெற்றியாகத் தோன்றி யிருக்காது. அது சோழர் துணைகொண்டு வட மன்னர் அடைந்த வெற்றியாதலால் சோழர் மெய்க்கீர்த்தி அதனைக் குறிக்காது விட்டிருக்கலாம்.