264
அப்பாத்துரையம் - 16
சோழர் படையெடுப்பும் இந்திய நாகரிகமும்
'இப்படையெடுப்பின் பயனாகத் தமிழர் நாகரிகமும் வங்காளத்தில் புகுந்தது என்று ஐயமின்றிக் கூறலாம்' எனத் திரு பண்டாரத்தார் வடநாட்டுப் படையெடுப்பு வரலாற்றை முடிக்கிறார். சோழர் படையுடன் சென்ற படைத் தலைவர் களுள்ளும் வீரகளுள்ளும் சிலர் திரும்பி வராது வங்காளத் திலேயே தங்கிவிட்டனர். வங்காளத்தில் பாலர் மரபையடுத்து ஆண்ட சேன மரபினர் இத்தகைய ஒரு சோழப்படைத் தலைவன் வழியினரே என்று வங்காள வரலாற்றாசிரியர் ஆர்.டி. பானர் ஜி குறித்துள்ளார். மிதிலை அல்லது பீகாரிலும் கருநாடக மரபினர் ஆட்சிசெய்தனர் என்று தெரிகிறது.
வங்காளத்திலிருந்து தமிழகத்துக்கும், தமிழகத்திலிருந்து வங்காளத்துக்கும் சைவப் பெரும் புலவர் தொடர்பு இராசேந்திரன் காலத்திலிருந்தே பெருகிற்று. பதினான்காம் நூற்றாண்டில் வங்கத்தில் வாழ்ந்த வைணவப் பெருந்தலைவர் சைதன்னியர் மைசூரிலும் காஞ்சியிலும் நெடுநாள் தங்கித் தமிழர் சமய இலக்கியவளத்தை வடதிசை கொண்டு சென்று பரப்பினார்.
கடல்கடந்த கடாரப் படையெடுப்பு: 1025
முதலாம் இராசேந்திரன் 13-ஆம் ஆண்டைய மெய்க் கீர்த்தி கடற்படைகளைக் கடல்நடுவில் செலுத்தி அவன் கடாரப் பேரரசின் கடல் கடந்த பல நாடுகளையும் வென்ற செய்தி கூறுகிறது. நெடியோன் காலத்துக்குப் பின் சோழர்களோ, பாண்டியர்களோ இவ்வளவு பாரிய அளவில் கடற்படை யெடுப்பை நடத்தியது கிடையாது. சோழர் கடற்படை எந்த அளவுக்கு வளர்ந்திருந்தது என்பதைக் கடாரத்தின் தொலை மட்டுமன்றி அக்கடாரப் பேரரசின் பரப்பும் சுட்டிக்காட்டும். மேற்கே அந்தமான் நிக்கோபார்த் தீவுகள், வடக்கே பர்மா, தெற்கே சுமத்திரா சாவா, கிழக்கே கீழ்கடல் ஆகிய எல்லைகள் அளாவிய கடாரப் பேரரசும் கடற்படை ஆற்றலில் பெரிதாகவே இருந்திருக்க வேண்டும். சோழர் படையெடுப்புக்கு முன் குறைந்தது 400 ஆண்டுகளும், அதன் பின் 400 ஆண்டுகளும் வாழ்ந்த அந்தப் பேரரசின் ஆற்றலைக் காண, அதனைப் பணியவைத்த சோழர் கடற்படை ஆற்றல் வியக்கத்தக்க தேயாகும்.