தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
265
இராசராசன் ஆட்சியின் பிற்பகுதியிலிருந்து இராசேந்திரன் ஆட்சியின் முற்பகுதிவரை சோழப் பேரரசும், கடாரப் பேரரசும் நேசப் பேரரசுகளாகவே இருந்தன. இராசராசன் காலத்தில் கடாரப் பேரரசனான சூடாமணிவர்மன் நாகபட்டினத்தில் கட்டிய புத்த பள்ளிக்கு (சூடாமணி விகாரம்) இராசராசப் பெரும் பள்ளி என்று பெயரிட்டிருந்தான். அதற்கு நிவந்தமாக இராசராசன் ஆனைமங்கலம் என்ற ஊரைப் பள்ளிச் சந்தமாக அளித்திருந்தான். இக் கோயில் இராசேந்திரன் காலத்திலிருந்த பேரரசன் சீர்மாற சீர் விசயோத்துங்கன் காலத்திலேயே முடிக்கப்பட்டது.
கு
ரு ரு பேரரசுகளுக்கு மிடையே இருந்து வந்த நட்பு திடுமென முறிவுறக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. சீனதேசத்துடனும் மேலை நாடுகளுடனும் தமிழரும் கடாரத்து மக்களும் கொண்டிருந்த வாணிகத் தொடர்பின் கடும்போட்டியே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று
வரலாற்றாசிரியர் கருதுகின்றனர்.
சில
இவ்வெற்றிகளைப் பற்றி மெய்க்கீர்த்தி தரும் விவரங்கள்
வழக்கம் போலத் தொகுப்புரையேயாகும்.
66
‘அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்திச்
சங்கிராம விசயோத் துங்கவர்மன்
ஆகிய கடாரத் தரசனை வாகையும்
பொருகடல் கும்பக் கரியொடும் அகப்படுத்து
உரிமையில் பிறக்கிய பருநிதிப் பிருநிதிப் பிறக்கமும்
ஆர்த்தவன் அகநர்கர்ப் போர்த் தொழில் வாசலில்
விச்சாதிரத்தோரணமும் மொய்த்தொளிர்
புனைமணிப்புதவமும் கனமணிக்கதவமும்
நிறைநீர் விசயமும் துறைநீர்ப்பண்ணையும், வண்மலையூர் எயில் தொன் மலையூரும், ஆழ்கட லகழ்சூழ் மாயிருடிங்கமும், கலங்காவல்வினை இலங்காசோகமும், காப்புறு நிறைபுனல் மாபப்பளாமும் காவல் அம்புரிசை மேவிலிம்பங்கமும்,