பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




266||

விளைப் பந்தூருடை வளைப்பந்தூரும்,

கலைத் தக்கோர்புகழ் தலைத்தக்கோலமும்

தீதமர்பல்வினை மாதமார்லிங்கமும் கலாமுதிர்கடுந்திறல் இலாமுரிதேசமும் தேனக்கவார் பொழில் மாநக்கவாரமும் தொடுகடற்காவல் கடுமுரண் கடாரமும் மாப்பொரு தண்டால் கொண்ட”

அப்பாத்துரையம் - 16

வடதிசையில் வெற்றிகள் அனைத்தும் ஒரே பேரரசன் ஆட்சிப் பகுதிக்குரியனவாதல் போல, இங்கேயும் எல்லா வெற்றிகளும் ஒரே பெரும் பேரரசனான கடாரப் பேரரசன் சங்கிராம விசயோத்துங்கன் ஆட்சிமீது நடத்தப்பட்ட வெற்றிகளேயாகும். அவனிட மிருந்து திறையாகப் பெற்ற பெரும் பொருட்குவையுடன் அவன் நகர்வாயிலான வித்தியாதர தோரணமும் புனை மணிப்புதவமும் கனமணிக்கதவமும் வெற்றிச் சின்னங்களாகக் கொண்டுவந்தான் என்று மெய்க்கீர்த்தி கூறுகிறது.

கடார வெற்றி 1. சீர்விசயப்போர்

விசயம் அல்லது சீர்விசயம் என்பது சீர்விசயப் பேரரசு என்று அழைக்கப்பட்ட கடாரப் பேரரசின் மைய ஆட்சியிடமேயாகும். இது இக்காலத்தில் சுமத்ரா என்று வழங்கும் பண்டைச் சாவகம் அல்லது பொன்னாட்டில் உள்ள தற்காலப் பாலம்பாங் நகரே என்று அறியப்படுகிறது.

கடார வெற்றி 2. பண்ணை

பனி அல்லது பனை என்று இப்போது வழங்கும் சுமத்ராத் தீ வின் கீழ்க்கரைப் பகுதியே பண்ணை எனப்படுகிறது.

கடார வெற்றி 3. மலையூர்

து எங்கிருந்தது என்று தெளிவாய் அறியப்படவில்லை. சுமாத்ராவிலேயே இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. மலையூர் என்ற ஓர் ஆறு அங்கு இருப்பதால் அதற்கருகில் அது இருந்திருக்கக் கூடும்.