பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

கடார வெற்றி 4. மாயிருடிங்கம்

267

இது மலாயாத் தீவக் குறையின் நடுவே உள்ள நாட்டைச் சார்ந்தது,

கடார வெற்றி 5. இலங்காசோகம்

இது கடாரம் (கெட்டாவைப்) போல மலாயாவின் கீழ்க் கரையிலுள்ளது.

கடார வெற்றி 6. மாபப்பளாம்

மலாயா வடக்கிலுள்ள கிராநில இடுக்கருகிலுள்ள பகுதியே மாபப்பளாமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கடார வெற்றி 7. தலைத் தக்கோலம்

மலாயா மேல் கரையில் வடபால் தகோபா மாகாணத்தின் தலைநகரான தக்கோலமே இது என்று தெரிகிறது.

கடார வெற்றி 8. தமாலிங்கம்

மலாயாவின் கீழ் கரையில் தெமிலிங் ஆறு கடலுடன்

கலக்கும் இடமே இது எனப்படுகிறது.

கடார வெற்றி 9. இலாமுரிதேசம் இது மலாயாவின் வடபகுதி.

கடார வெற்றி 10. மாநக்கவாரம்

இது நிக்கோபார்த் தீவுகள் ஆகும்.

கடார வெற்றியின் பின் விளைவுகள்

நெடியோன் காலமுதல் கிழக்காசியாவுக்கும் சீனாவுக்கும் தமிழகத்துக்கும் இடையேயிருந்த தொடர்புகள் சோழர் வெற்றி களால் மேலும் பெருகியிருக்கவேண்டும். சோழர் வெற்றிக்குரிய இடங்கள் மலாயா சூழ்ந்தவை என்று மட்டுமே நமக்குத் தெரிய வருகின்றன. ஆனால், இந்து சீனாவிலும் பின்னாட்களில் தமிழ் மரபினர் ஆட்சியும் கலையும், சமயமும் இலக்கியமும் பேரளவில்