(268
அப்பாத்துரையம் - 16
பரவியிருந்தது காண்கிறோம். வட இந்திய சமயமாகிய புத்த சமயத்தையும், மேலை அரபு நாட்டவர் சமயமாகிய இஸ்லாத்தை யும் தொலைக் கிழக்குத் திசையில் கொண்டு சென்றவர்கள் அவ்வச்சமயம் சார்ந்த தமிழரே என்றறிகிறோம். காம்போசத்துடனும், சீயத்துடனும் உள்ள தமிழ்த் தொடர்புச் சின்னங்கள் இன்றுவரை நிலவுகின்றன.
குலோத்துங்கனுக்குப் பின் இருந்த தமிழ்ப் புலவர்கள் காலம் வரை கங்கைப் போரின் புகழும் கடாரப் போரின் புகழுமே இராசேந்திரன் பெரும் புகழாகவும் சோழர் புகழ் வைப்பாகவும் போற்றப்பட்டுள்ளன.
66
“களிறு கங்கைநீர் உண்ண மண்ணையில் காய்சினத் தொடே கலவு செம்பியன் குளிறுதெண் திரைக் குரை கடாரமும்
66
கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்
கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
கங்காபுரி புரந்த கற்பகம்
99
கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
சிங்காதனத்திருந்த செம்பியர்கோன்
99
(கலிங்கத்துப் பரணி 189)
(விக்கிரம சோழன் உலா 34 - 36)
(குலாத்துங்க சோழன் உலா 49–50)
என இப்புவியேற்றின் வெற்றிகளைக் கவியேறுகள் பரவினர்.
பாண்டியர் விடுதலைக் கிளர்ச்சியின் முறிவு
இராசேந்திரன் ஆட்சியின் பிற்பகுதியில் பாண்டிய மரபினர் இழந்த நாட்டை மீண்டும் பெற முனைந்தெழுந்தனர். இராசேந்திரன் மகனாகிய இராசாதிராசன் சோழர் படை நடத்திச் சென்று அவர்களை முறியடித்தான். கிளர்ச்சி செய்த பாண்டியர் மூவருள்ளே. மானாபரணன் என்பவன் தலைதுணிக்கப்பெற்றான். வீர கேரளன் என்பவன் யானைக் காலிலிட்டு இடறப்பட்டான். சுந்தர பாண்டியன் என்ற ஒருவனே