தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
269
தலைவிரி கோலத்துடன் முல்லையூர் புகுந்து ஒளித்துக் கொண்டான். இராசாதிராசன் மெய்க்கீர்த்தியிலேயே இவை குறிக்கப்பட்டுள்ளன.
சேரர் கிளர்ச்சி முறிவு
சேர நாட்டிலிருந்த பல அரசர் சிற்றரசர் மரபுகளும் இச்சமயம் விடுதலை நாடிக் கிளர்ந்தெழுந்தன. ஆனால், இராசேந்திரன் புதல்வன் இராசாதிராசன் சேரநாட்டின் மீதும் படையெடுத்துச் சென்று அவற்றை அடக்கினான். வேணாடு அல்லது திருவாங்கூர் அரசன் போரில் கொலையுண்டான். அவனுக்கு உதவியாக வந்த கூபக நாட்டரசன் புறமுதுகிட்டு ஓடி ஒளிந்தான்.பரசுராமனால் முடி சூட்டப்பட்ட மரபினரான எலிமலை சார்ந்த இராமகுட நாட்டு மன்னன் தோல்வியுற்றுப் பணிந்து சோழர் ஆதரவு பெற்று நீண்ட காலம் அந்நாட்டை ஆண்டான்.
ஈழக் கிளர்ச்சி
1029 லிருந்து 1041 வரை ரோகண நாட்டை ஆண்ட ஐந்தாம் மயிந்தன் புதல்வன் காசிபன் என்ற விக்கிரமபாகு இலங்கை முற்றிலும் வெல்லும் அவாவில் பேர்புரிந்து மாண்டான் என்று சோழர் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அவனுக்குப் பின் மூன்று ஆண்டுகள் ரோகணத்தை ஆள முயன்ற மகாலான கித்தி என்ற அவன் மகனும் படியிழந்து முடியிழந்து, சோழரிடம் பெற்ற அவமதிப்புத் தாங்காமல் 1044-ல் தன்கழுத்தைத் தானே அறுத்துக் கொண்டு மாண்டான் என்று கேள்விப்படுகிறோம்.
சோழர் சாளுக்கியர் மூன்றாம் போராட்டம்: 1042
மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் சயசிங்கனுக் குப் பின் 1042-ல் முதல் சோமேசுரன் ஆகவமல்லன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். அவன் சோழ எல்லை கடக்க முயன்றதால், இராசேந்திரன் புதல்வன் இராசாதிராசன் படையுடன் சென்று அவனை முறியடித்தான். படைத் தலைவர்களாகிய கண்டப் பையன், கங்காதரன் ஆகியோர் கொலையுண்டனர். சோமேசு வரன் புதல்வர்களாகிய விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும்,