(270
||--
அப்பாத்துரையம் - 16
படைத்தலைவனான சங்கமையனும் போர்க்களத்திலிருந்து ஒளிந்தோடினர். கொள்ளிப்பாக்கை நகரை எரியூட்டி, யானை குதிரை -பொற்குவை ஆகியபெருந் திறையுடன் இராசா
சோணாடு மீண்டான்.
வெங்கை நாட்டுறவு
ாதிராசன்
இராசராசன் மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய விசயாதித்தனுக்கும் பிறந்த மகன் நரேந்தின். இராசேந்திரன் தன் புதல்வியர் இருவரில் இளையளாகிய அம்மங்கை தேவியை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். இவ்விருவர் புதல்வனே பின்னாளைய முதலாம் குலோத்துங்கன் ஆனான்.
களிறு பெற்றெடுத்த போதகங்கள்
பேரரசர் பிள்ளைகள் பெருவீரராய் இருப்பது மனித இனவர லாறு அறியாத ஒரு செய்தி ஆகும். சங்ககாலச் சேரர் மரபும் இடைக் கால, பிற்கால பாண்டியர் மரபும் இதற்கு ஓரளவு விலக்காகலாம். ஆனால், அவ்விரு எல்லையிலும் நிலவிய, இஸ்லாமிய அரசர் குடிகளில் இருந்தது போன்ற இடைவிடாப் போட்டி இதற்குக் காரணம் ஆகலாம். ஆனால், சோழப் பேரரசு வ்வகையில் வியக்கத்தக்க பெருமரபாய் அமைந்தது. முதலாம் இராசராசன் தன் மரபினரிடையே ஊட்டிய பேரவா ஆர்வமும், வளர்த்த குடிப்பயிற்சி முறை மரபுமே இதற்கு அடிப்படை என்னலாம். மும்முடிச் சோழனாகிய அவன் பெற்ற களிறான முதல் இராசேந்திரன் தந்தையினும் பெரிய வீரனென்றால், அக்களிறு பெற்ற போதகங்களாகிய முதல் இராசாதி ராசன் (1018 -1054), இரண்டாம் இராசேந்திரன் (1051-1063), வீர இராசேந்திரன் (1063 1070) ஆகியவர்கள் அவனுக்கு மிகுதி பிற்படாத பெரு வீரராயிருந்தது குறிப்பிடத்தக்கது. தந்தையைப் போல அவர்கள் வெற்றிகள் நிலங்கடந்து செல்லாவிட்டாலும், தந்தையாலும் பின்னோராலும் வெல்லப்படாதிருந்த மேலைச் சாளுக்கியரை முற்றிலும் முறியடித்து அடக்க அவர்கள் காட்டிய தீரம் கொஞ்ச நஞ்சமன்று. அவர்கள் அதில் வெற்றியடையாதது ஒரு குறை யன்று -பாண்டியரைப் போலச் சாளுக்கியரும் விடாப் பிடியுடைய
-