272
அப்பாத்துரையம் - 16
என்றும் மகாவம்சோ குறிக்கிறது. ஆனால், கொல்லப்பட்டது கன்னியாகுப்ஜத்தை ஆண்ட வீரசலாமேகன் என்றும், அவன் தாய், மனைவி, தமக்கை ஆகியவரைக் கைப்பற்றிச் சோழர் அவமதித்த பின் அவன் மீண்டும் போர் செய்து மாண்டான் என்றும் சோழர் கூறுகின்றனர்.
இரண்டாம் இராசேந்திரன் ஆட்சித் தொடக்கத்தில் 1054 அல்லது 1055 -லும் கலிங்க மன்னனென்று கூறப்படும் இன்னொரு சலாமேகன் கொல்லப்பட்டதாகத் தெரியவருகிறது. அதே போரில் இலங்கை மன்னன் மானாபரணனின் இரு புதல்வர்கள் சிறைப்பட்டனர்.
வீரராசேந்திரன் ஆட்சியில் ரோகணத்தில் இருந்து கொண்டு இலங்கை மன்னன் விசயபாகு போர் தொடுத்தான்.1064 -65-இல் சோழர் அனுராதபுரப் போரில் இலங்கை மன்னனை முறியடித்தனர். ஆனால், இதன்பின் விசயபாகு தமிழர் கோட்டையாகிய புலத்திசைக் களைப்பற்றித் தமிழரை வெளியேற்றினான் என்று அறிகிறோம். ஆயினும் இதன் பின்னரும் தோற்று ஓடி ஒளிந்தான். சோழர் அவன் மனைவியைச் சிறைப்படுத்திக் கொண்டும் அளப் பரும் திறைகொண்டும் சென்றனர்.
சோழ - சாளுக்கியப் போராட்டம்: முதற்கட்டம்: கம்பிலிப்போர் 1046
செல்வம்
முதல் இராசேந்திரன் ஆட்சியிறுதியில் நடத்தப்பட்ட சோழ சாளுக்கியப் போரில் படைப் பெருந்தலைவனாயிருந்து போர் நடத்தியவன் இராசாதிராசனே. இவ்விரு பேரரசுகளின் இடைவிடா அழிவுப் போர்களின் அலை எதிர் அலைகள் முதல் இராசேந்திரன் ஆட்சி கடந்தே உச்ச நிலை எய்தின.
1046-இல் இராசாதிராசன் முடியேற்றபின் சாளுக்கியப் பேரரசையே வென்று கொள்ளும் ஆர்வத்துடன் அதன் எல்லை மீது படையெடுத்தான். இச்சமயம் நிகழ்ந்த போரில் சோழன் பெரு வெற்றி கொண்டான். சாளுக்கியப் படைத்தலைவர் பலர் களம் விட்டோடினர். ஓடிய அத்தலைவர்களின் பெயர்ப்