தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
273
பட்டியலாகக் கண்டர் தினகரன்.நாரணன், கணபதி, மதுசூதனன் ஆகிய பெயர் களையும் மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது.
இப்போர் முடிவில் கம்பிலிநகரத்திலிருந்த சாளுக்கியப் பேரரசர் மாளிகை தகர்த்தெறியப்பட்டது. அதே இடத்தில் சோழரது வெற்றித் தூண் நாட்டப்பட்டது. இதைக் கலிங்கத்துப் பரணி 'கம்பிலிச் சயத் தம்பம் நட்டதும்' என்று குறிக்கிறது.
சோழ சாளுக்கியப் போட்டி: 2-ஆம் கட்டம்: பூண்டுர்ப் GLITIT 1048
இராசாதிராசன் சாளுக்கியர் தாயகமாகிய குந்தள நாட்டின் மீது படையெடுத்து, கிருஷ்ணை ஆற்றங்கரையிலுள்ள பூண்டூரில் நடைபெற்ற போரில் சாளுக்கியரைப் பேரழிவுக்கு ஆளாக்கினான். இப்போரில் இராசாதிராசன் தம்பியான இரண்டாம் இராசேந்திரனும் அவனுடன் படைத்தலைவனாகச் சென்றிருந்தான். எதிர்த் தரப்பில் சாளுக்கியப் படைத்தலைவர் களாயிருந்தவர்கள் தெலுங்க விச்சையன், அத்திராசன், அக்கப்பையன், கொண்டடையராஜன், முஞ்சன், தண்டநாயகன் தனஞ்சயன், வீரமாணிக்கன் ஆகியவர்கள். அனைவரும் முறியடிக்கப்பட்டதுடன் படைத்தலைவன் விச்சையனின் தாய் தந்தையரும் எண்ணற்ற மகளிரும் சிறைப்பிடிக்கப்பட்டனர். பூண்டூர் நகரின் மதில்கள் இடித்துப் பாழாக்கப்பட்டன.
க
ய
மண்ணதி என்ற நகரிலிருந்த சாளுக்கிய மாளிகையைச் சோழர் எரியூட்டினர். அந்நகரிலேயே சோழர் புலிச்சின்னம் பொறித்த வெற்றித்தூண் நாட்டினர்.
மேலைச் சாளுக்கியர் கிருஷ்ணை, துங்கபத்திரை ஆறுகளில் அழகிய பெரிய மூன்று அரச துறைகள் கட்டியிருந்தனர். சிறுதுறை, பெருந்துறை, தெய்வ வீமகசி என்ற அம்முத் துறைகளிலும் சோழ அரசன் தன் பட்டத்து யானைகளைக் குளிக்கச் செய்து சாளுக்கியரை அவமதித்தான்.
அருகிலிருந்த வராகமலையில் சாளுக்கியர் தம் வராக (பன்றி) முத்திரை பொறித்திருந்தனர்.அதே மலையில் சோழர் தம் புலி முத்திரை பொறித்து, அப்பொறி தாங்கிய வெற்றித் தூணையும் நிறுவினர்.