பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




(274) ||-

அப்பாத்துரையம் - 16

இச்சமயம் சோழர் தங்கியிருந்த பாசறையில் சாளுக்கிய மன்னன் ஆகவமல்லன் ஒற்றர்களாக்கிய வீரர் வந்தனர். சோழன் அவர்களைக் கண்டுபிடித்து அவர்களைப் பிடித்துக் கட்டி ஆகவ மல்லனிடமே அனுப்பினான். ஆனால்,, ‘ஆகவமல்லன் எங்கும் போரில் புறங்காட்டி ஓடியவன்' என்று அவர்கள் மார்பிலேயே எழுதி அனுப்பினான்.

இவ் அவமதிப்புத் தாங்காமல் ஆகலமல்லன் மீண்டும் போர் புரிந்து தோற்றான். இப்போரில் நுளம்பன், காளிதாசன், சாமுண்டன்,பொம்மையன், வில்லவராசன் முதலிய சாளுக்கியப் படைத்தலைவர்கள் தோற்றோடினர். அவர்களுக்கு உதவியாக அவர்களுடன் போர்செய்த கூர்ச்சர மன்னன் ஒருவன் போரிலேயே மாண்டான்.

சோழ -சாளுக்கியப் போட்டி: கலியாண புரம் அழிவு

ஆகவமல்லன் மீண்டும் சோழரிடம் வீம்புடன் தூதனுப் பினான். சோழர் தூதரைக் கேலி செய்து திருப்பி அனுப்பினர். அவர்களுள் ஒருவனுக்கு ஆண் வேடமிட்டு ஆகவமல்லன் என்ற பெயரை ஒட்டியும், மற்றொருவனக்குப் பெண்ணுடை உடுத்து பெண்கள் போல ஐம்பால் கொண்டையிட்டு, ஆகவமல்லி என்று பெயர் ஒட்டியும் அனுப்பினர்.

இவ்வவமதிப்பின் பின் நடந்த மறுபோரில் சோழர் சாளுக்கிய தலைநகராகிய கலியாணபுரத்தையே கைப்பற்றினர். பல்லவர் சாளுக்கிய வாதாபியை அழித்தது போலவும், முதல் ராசராசன் காலத்தில் சோழர் மேலைச் சாளக்கியரின் முதல் தலைநகரமாகிய மண்ணைக்கடகத்தை (மான்யகேதத்தை) அழித்தது போலவும், இப்போது இராசாதிராசன் அவர்கள் புதிய தலைநகராகிய கலியாண புரத்தை அழித்தான்.

கலியாணபுர வெற்றியின் சின்னமாகச் சோழர் கொண்டு வந்த பொருள்களில், அந்நகரிலுள்ள துவாரபாலர் படிமம் ஒன்று. அதன் பீடத்தில் “சிரீ ஸ்வஸ்தி சிரீ உடையார் விசயராசேந்திர தேவர் கலியாண புரம் எறிந்த கொண்டுவந்த துவாரபாலர்” என்று வரையப்பட்டுள்ளது.