பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

277

சூடினான். பட்டாபிடேக முழக்கமாகப் போர்முரசு கொட்டுவித்தான். புதிய வீர மன்னனைப் பெற்ற கிளர்ச்சியில் வீரர் மீண்டும் திரண்டனர். அம்புமாரிகள் முன்போலவே பொழிந்தன. இராசேந்திரனுடைய குன்றுபோன்ற புயங்களிலும் துடைகளிலும் அவை தைத்துப் புண்ணாறு பெருக்கின. ஆனால், அவன் தன் போர் வீரர்களுக்கே அதன் மூலம் வீரமூட்டி ஆர்ப்பரித்துப் போரிட்டான்.

சாளுக்கியர் அடைய இருந்த வீரத் திருநங்கை சோழர் பக்கம் திரும்பி நின்று நகைத்தாள். தோல்வியை வெற்றியாக்கி இராசேந்திரன் புதிய ஆட்சியைப் புகழாட்சியாக்கினான்.

கொப்பத்துப் போர் வரலாற்றில் புகழ் பெற்ற வெற்றி மட்டுமன்று; தமிழ் இலக்கியம் நெடுநாள் மறவாத போராயிற்று.

66

ஒரு களிற்றின்மேல் வரு களிற்றை ஒத்து

உலகு உயக்கொளப் பொருது கொப்பையில் பொருகளத்திலே முடிகவித்தவன்”

என்று கலிங்கத்துப் பரணியில் சயங்கொண்டார் இராசேந்திரன் வீரத்தைப் பாடுகின்றார்.

“கொலை யானை

பப்பத்தொரு பசிப்பேய் பற்ற ஒருபரணி

கொப்பத்து ஒரு களிற்றால் கொண்டகோன்

“பபற்றலரை

(இராசராச சோழனுலா)

வெப்பத்து அடுகளத்தில் வேழங்கள் ஆயிரமும் கொப்பத்து ஒரு களிற்றால் கொண்டோனும்"

(விக்கிரம சோழனுலா)

என மூவர் உலாவில் ஒட்டக்கூத்தர் இதே போரைக் குறிக்கிறார்.

சாளுக்கியர் பக்கம் கடைசி இளவரசனான சயசிங்கன் போரில் இறந்தான். தவிர, படைத் தலைவர்களாகிய புலிகேசி, தசபன்மன், அசோகையன், ஆரையன், மொட்டையன், நன்னி நுளம்பன் ஆகியோரும் மாண்டனர். மற்றச் சா சாளுக்கிய