(278
அப்பாத்துரையம் - 16
இளவரசரும் வன்னியரேவன், துத்தன், குண்டமையன் முதலிய படைத் தலைவர் களும், வீரர்களும் அஞ்சியோடிஒளிந்தனர்.
சாளுக்கியருடைய பட்டத்து அரசியரான சாங்கப்பை சத்தியவ்வை என்பவர்கள் இருவரும் கைப்பற்றப்பட்டனர். அவர்கள் பட்டத்து யானைகளாகிய சத்துருபயங்கரன், கரபத்திர, மூலபத்திரன் ஆகியவையும் சாளுக்கியரின் வராகக் கொடியும், பெருந்திரளான நிதிக்குவையும் சோழர் வசமாயின. எண்ணிறந்த எதிரிகளின் ஒட்டகங்களும் குதிரைகளும் பிறபொருள்களும் சோழர் கைப்பட்டன.
இராசேந்திரன் போர்க்களத்திலேயே வீராபிடேகம் செய்த பின் கோலாம்பூரில் ஒரு வெற்றித் தூண் நாட்டினான்.
இராசராசன் கல்வெட்டுக்களில் 'கலியாணபுரமும் கொல்லா புரமும் எரிந்து யானைமேல் துஞ்சின பெருமான்’ என்று குறிக்கப் பெறுகிறான்.
இப்போரிலே சாளுக்கியர் தாமே சோழரை முறியடித்துக் காஞ்சி நோக்கித் துரத்தியதாகக் கூறுகின்றனர். இப்போர் பற்றிய மட்டில் இது சரியன்று. ஆனால், சாளக்கியர் வலு எப்போதும் பாதுகாப்பில் இருந்தது. சோழர் எத்தனை வெற்றி பெற்றாலும், அவர்கள் போனபின் சாளுக்கியர் தம் கைத்திறம் காட்டித் தம் பழய எல்லைக்கு வர முடிந்தது. சோழர் தாம் வென்ற இடங்களைக் காத்து நிலையாகப் பேண முடியவில்லை.
சோழ சாளுக்கியர் போட்டி: முடக்காற்றுப் போர் 1059
கொப்பத்துப் போரில் பெற்ற அவமதிப்பை நீக்கும் எண்ணத் துடன் ஆகவமல்லன் பெரும் படையுடன் சோழநாட்டைத் தாக்கப் புறப்பட்டான். ஆனால், சோழர் படை கிருஷ்ணையாற்றின் பக்கமே அப்படையைச் சந்தித்துப் போர் தொடங்கிற்று.இதுவே முடக் காற்றுப் போர் ஆகும்.
இதிலும் மேலைச் சாளுக்கியர் பல துன்பங்களுக்கு ஆளா யினர். மேலைச் சாளுக்கிய தண்ட நாயகனாகிய வாலாதேவனும் வேறு பல தலைவர்களும் கொல்லப்பட்டனர். மன்னன் ஆகவ மல்லவனும் அவன் மகன் விக்கிரமாதித்தனும் இருகையன் என்ற தலைவனும் அமர்க்களத்திலிருந்து ஓடினர். தம் மானத்தைக்