280
||--
அப்பாத்துரையம் - 16
மகன் பிள்ளையாகிய பேரன். அவன் 1064-ல் உயிர் துறந்தான். அத்தறுவாயைப் பயன்படுத்தி, அவன் மகன் இரண்டாம் நரேந்திரன் பட்டத்துக்கு வருமுன்பே, மேலைச் சாளுக்கிய அரசன் ஆகவ மல்லன் தன் கீழ் வனவாசித்தண்டநாயகனாய் இருந்த சாமுண்டரா யனை அனுப்பிக் கீழைச்சாளுக்கிய நாட்டை வென்று கொள்ள எண்ணினான். ஆனால், வீரராசேந்திரன் அவனுடன் போராடி அவனை முறியடித்து அவன் தலை துணித்தான். சாமுண்டராயன் புதல்வியைக் கைப்பற்றி மூக்கை அரிந்ததாகவும் சோழரது கருவூர்க் கல்வெட்டு கூறுகிறது.
3-ஆம் போர் 1064
இதுவே கூடல் சங்கமப் போர் ஆகும்.
ச
கூடல் சங்கமம் என்பது, துங்கபத்திரையும், கிருஷ்ணையும் கூடும் இடத்திலுள்ள கூடலியாய் இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், அது கிருஷ்ணையும் பஞ்ச கங்கையாறு களும் கூடும் இடத்தில் பெல்காம் மாவட்டத்தில் கிட்னப்பூர்ப் பகுதியிலே இருந்தது என்று கருத இடமுண்டு. ஏனெனில் இந்தக் களத்திலேயே கொப்பப்போர் நடைபெற்றதாகல் வேண்டும். மற்றும் இதே சங்கமத்துக்குப் பின்னும் ஒரு தடவை ஆகவமல்லன் வீரராசேந்திரனைப் போருக் கழைத்தபோது சோழர் கரந்தை என்ற இடத்திலேயே காத்திருந்தனர் என்று அறிகிறோம். கரந்தை பஞ்ச கங்கை யாற்றுப் பக்கமே உள்ளது.
மேலைச் சாளுக்கியர் வடக்கிருந்து பெருகிவரும் கடல் போன்ற ஒருபெரும் படை திரட்டிக் கொண்டு களத்தில் அணியணி யாக வந்தனர். இருதரப்பினரும் வெற்றி எப்பக்கம் சாயும் என்றறி யாத நிலையில் நெடுநேரம் போராடினர். இறுதியில் வீரராசேந்திரனே பெரு வெற்றியுற்று, சாளுக்கிய வேந்தனான ஆகவமல்லன் பாசறையை முற்றுகையிட்டு அவன் மனைவியரையும் பட்டத்து யானையாகியப் புட்பகப் பிடியையும் வராகக் கொடியையும் யானை குதிரைகளையும் மற்ற நிதிக் குவைகளையும் கைப்பற்றிச் சோணாட்டுக்கு அனுப்பினான்.
போரில் மேலைச் சாளுக்கிய தண்டநாயகர்களான கேசவன், கேத்தரையன், மாரயன், போத்தரயன், இரேச்சயன் முதலியவர்கள் கொலையுண்டனர். படைத் தலைவனாகிய