பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

281

மதுவணனும், மன்னனின் மக்களாகிய விக்கிரமாதித்தன், சயசிங்கன் ஆகியவர்களும், மன்னன் ஆகவமல்லனும் போர்க்களத்திலிருந்து சிதறியோடினர்.

சோழன் வீரராசேந்திரன் தன் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் சென்று வெற்றி மணிமுடிசூடி அபிடேகம் செய்து கொண்டான்.

66

"குந்தளரையுந் கூடல் சங்கமத்து வென்ற கோன் அபயன்”

(கலிங்கத்துப் பரணி, இராச பாரம்பரியம், 29)

என்று சயங்கொண்டாரும்;

66

கூடலார்

சங்கமத்துக் கொள்ளும் தனிப்பரணிக்கு எண்ணிறந்த

99

துங்கமதயானை துணித்தோனும்......'

(விக்கிரமசோழன் உலா 42 - 44)

“பாடஅரிய பரணி பகட்டணி வீழ்

கூடலார் சங்கமத்துக் கொண்டகோன்”

(இராசராச சோழன் உலா 49 - 50)

என்று ஒட்டக்கூத்தரும் இப்போரின் முரசு முழக்குகின்றனர். வீரராசேந்திரன் மெய்க்கீர்த்தியும் கல்வெட்டுக்களும் காவிய முறையில் இப்போரைப் புனைந்து விரித்துரைக்கின்றன.

சோழ சாளுக்கியப் போட்டி: 1066 -1067. கிருஷ்ணை ஆற்றுப் போர் 1066. விசயவாடாப் போர் 1067

சோழ சாளுக்கியப் போட்டி கூடல் சங்கமத்துப் போரினால் முற்றுப் பெறவில்லை. இரண்டாண்டுகளுக்குள் மீண்டும் தொடங் கிற்று.

நான்காம் போர்: கிருஷ்ணையாற்றுப் போர்: 1066

இது ஏதோ ஓர் ஆற்றின் பக்கம் நடைபெற்றதாக மட்டும் அறிகிறோம். ஆற்றின் பெயரோ, இடமோ திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஆயினும் முன் பின் போர்களைப் போலவே