282
அப்பாத்துரையம் - 16
இதுவும் கிருஷ்ணையாற்றின் பக்கம் நடந்திருக்கக் கூடும். இப் போரில் சாளுக்கியப் படைத்தலைவர்களான மல்லியண்ணன், மஞ்சிப் பையன், பிரமதேவன், அசோகையன், சத்தியண்ணன், வீமையன், வங்காரன் ஆகியோர் களத்தில் பட்டனர். தவிர, சாளுக்கியருக்கு உதவியாக வந்த கங்கன், நுளம்பன், காடவர் கோன், வைதும்பராயன் என்ற சிற்றரசர்களும் உயிர் நீத்தனர்.
ஐந்தாம் போர்: விசயவாடாப் போர்: சக்கரக் கோட்ட வெற்றி: 1067
என்று
கூடல் சங்கமத்திலேயே இன்னொரு முறை என்னுடன் போர் புரிந்துபார்; அப்போதுதான் நீ வீரன் வாய்த்துடுக்காக ஆகவமல்லன் மீண்டும் வீரராசேந்திரனுக்குக் கங்காகேத்தன் என்ற படைத்தலைவன் மூலம் சொல்லியனுப்பிய தாகக் கேள்விப்படுகிறோம்.அதன்படிவீரராசேந்திரன் படையுடன் கூடல் சங்கமத்துக்கு அருகிலுள்ள கரந்தையில் சென்றுகாத்திருந்தான். ஆனால், ஆகவமல்லன் வரவில்லை. ஒரு மாதம் மாதம் வரை காத்திருந்தான். சோழன் சீற்றங் கொண்டு அப்பகுதியிலிருந்த தேவநாதன், சித்தி, கேசி என்ற படைத்தலைவர்களைத் தோற் கடித்துத் துரத்தினான். நகரங்களை எரியூட்டிக் களத்திலேயே வெற்றித் தூண் நாட்டினான். அத்துடன் ஆகவமல்லனைப் போல உருவம் செய்து, கழுத்தில் கண்டிகை பூட்டி, 'ஐந்து தடவை தோற்று ஓடியவன்' என்ற விளம்பரப் பலகை எழுதி மார்பில் தொங்க விட்டு, ஊர்வலம் கொண்டு சென்று அவமதித்தான். இதன் பின்னும் ஆகவமல்லன் வராதது கண்டு அவன் வியப்புற்றான்.
ஆகவமல்லன் வராமைக்குக் காரணம் அவன் மாள்வே என்பது சோழனுக்கு நெடுநாள் தெரியாது.1068-ல் அவன் நீரில் மூழ்கி உயிர் நீத்தான்.
ஆறாம் போர் : விசயவாடாப் போர்: 1068
ஆகவமல்லன் இறந்தது அவன் மகன் விக்கிரமாதித் தனுக்கும் தெரியாது.அவன் கீழைச்சாளுக்கியரை வென்று அவர்கள் நாட்டைக் கைக் கொள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தான்.