தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
283
சாளுக்கியப் பெரு வீரனான அவன் கீழைச்சாளுக்கியரை வென்றதுடன் அமையாமல் அவர்கள் நாட்டுக்கு வடக்கேயுள்ள சக்கரக்கோட்டத்தையும் கைப்பற்றினான்.
கூடல் சங்கமத்துப் போர்க்களத்தருகே நின்று விரைந்த வீர ராசேந்திரன் கீழைச் சாளுக்கியர் நாட்டை மீண்டும் கைப்பற்ற முனைந்தான். அவனைத் தடுத்து நிறுத்த முனைந்தனர், சாளுக்கியப் படைத் தலைவர்களான சனநாதன், இராசமய்யன், திப்பரசன் ஆகியோர். இரு தரப்பினருக்கும் 1068-ல் விசயவாடாவில் கடும் போர் நிகழ்ந்தது. அதில் சாளுக்கிய படைத்தலைவர்கள் முற்றிலும் தோல்வியடைந்து காட்டுக்குள் ஒளித்தோடினர். பின்னர் சோழன் சக்கரக் கோட்டம் தாண்டி வேங்கை நாட்டின் வடபகுதியையும் வென்றான். விக்கிரமாதித்தனிடமிருந்து தோற்றோடி தன்னிடம் வந்து அடைக்கலம் புகுந்திருந்த கீழைச் சாளுக்கிய மன்னன் ஏழாம் விசயாதித்தனிடமே அவன் நாட்டை ஒப்படைத்து மீண்டான்.
சோழ சாளுக்கியப் போட்டி: ஏழாம்போர்: 1068 -1070
இச்சமயம் ஆகவமல்லன் இறந்ததனால் அவன் பிள்ளை களான இரண்டாம் சோமேசுவரன், ஆறாம் விக்கிரமாதித்தன் ஆகியோருக் கிடையே பிளவு ஏற்பட்டது. மூத்தவனான சோமேகவரனே அரசனானான, விக்கிரமாதித்தன் சோழன் உதவி நாடினான்.
வீர ராசேந்திரன் தற்போதைய அனந்தப்பூர் மாவட்டத் திலுள்ள ஏத்தியை முற்றுகையிட்டான். பின் கம்பிலி நகரை எரியூட்டினான். இடைதுறை நாடு புகுந்து அங்குள்ள கரடிக் கல் என்ற இடத்தில் வெற்றித் தூண்நாட்டினான். இறுதியில் சோமேசு வரனைத் துரத்திவிட்டு, விக்கிரமாதித்தனையே மன்னனாக்கிப் பட்டம் கட்டினான். தன் புதல்வியையும் அவனுக்கு மணம் செய்து கொடுத்து, சாளுக்கியர் பகையரசை நட்பரசாக்கித் தன் வயப் படுத்தவும் முயன்றான்.
விக்கிரமாதித்தன்
வாழ்க்கையைச் சமஸ்கிருத காவியமாக்கிய பில்கணன் விக்கிரமாதித்தன் வெற்றிக்கு அவன் தம்பி சயசிம்மனும், கோவாவிலிருந்து ஆண்ட கடம்பகுல மன்னன்