284
அப்பாத்துரையம் - 16
சயகேசி, மைசூர்ப் பகுதியில் ஆண்ட ஆளுபவேந்தன் ஆகியோர் உதவியே காரணம் என்று கூறுகிறான். அவன் வலிமை கண்டு சோழன் அவனை மருமகனாக்கி நேசம் காட்டியதாகவும் குறிக்கிறான். ஆனால், சயசிம்மன் முதலியோர் சோழ அரசன் நட்புப் பெறும் வகையிலேயே முனைந்து உதவியிருந்தன ராதல் வேண்டும் என்னலாம்.
உ
இராஷ்டிரகூடர் மண உறவால் முன் சோழர் நன்மைக்கு மாறாகத் தீமையே அடைந்தது போல, சாளுக்கியரின் இப்புதிய உறவும் விரைவில் நேசத்துக்கு மாறாகப் பகைமையையே வளர்த்தது.
இரண்டாம் கடார வெற்றி: 1068
சோழர் மேலுரிமை ஏற்றிருந்த கடார அரசில் அரசுரிமை காரணமாகப் பிளவு ஏற்பட்டது.அரசிழந்து தன்னிடம்அடைக்கலம் புகுந்த இளவரசனுக்கு உதவியாக,வீரராசேந்திரன் தன்படைத்தலைவர் களை அனுப்பினான். கடாரத்தை மீட்டு அவன் நட்புக்குரிய வனிடமே தந்தான்.
கீழைச் சாளுக்கிய அரசன் ஏழாம் விசயாதித்தனின் உறவினன் சாளுக்கிய இரண்டாம் இராசேந்திரன் வீர ராசேந்திரனின் மருமகன். பின்னாளில் முதலாம் குலோத்துங்க சோழனானவன் அவனே. கீழைச் சாளுக்கிய அரசை ஏழாம் விசயாதித்தன் பெற்றதனால், அவன் சிலகாலம் முதலாம் இராசேந்திரன் வடதிசையில் வென்ற நாடுகளில் சிலவற்றைக் கைக் கொண்டு ஆண்டு வந்தான். இக்கடாரப் போரில் அவனும் படைத்தலைவர்களுள் ஒருவனாகச் சென்று போர் செய்து புகழ் பெற்றான் என்று தோற்றுகிறது. ஏனெனில் கடாரப் பேரரசிலிருந்து இச்சமயம் சீனத்துக்கு அனுப் பட்ட தூதுவர் அவனையே கடாரப் பேரரசனாகக் குறித்துள்ளனர்.
‘பரக்கும் ஓதக் கடாரம் அழித்த நாள்' (கலிங்கத்துப் பரணி 618) என்று கலிங்கத்துப்பரணி முதலாம் குலோத்துங்கனுக்கும் கடார வெற்றியை உரிமையாக்கி யிருப்பது இதனாலேயே
என்னலாம்.