பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

முதலாம் குலோத்துங்கன் வடதிசை வெற்றிகள்; வயிராகரப் போர்: சக்கரக் கோட்டம் போர்:

285

சோழப் பேரரசனாகு முன்னும், கடாரம் செல்லுமுன்னும் கீழைச்சாளுக்கிய இரண்டாம் இராசேந்திரனாயிருந்த முதலாம் குலோத்துங்கன் அடைந்த வடதிசை வெற்றிகளில் வயிராகரப் போரும், சக்கரக் கோட்ட வெற்றியும் முனைப்பாக மூவருலாக் களிலும் கலிங்கத்துப் பரணியிலும் குறிக்கப்படுகின்றன.இவற்றில் சக்கரக் கோட்டத்தில் ஆட்சி செய்த அரசன் தாராவிலிருந்து ஆண்டவன் என்று தெரிகிறது. அது தாராவில் ஆண்ட வடதிசைப் பெரும்புகழ் விக்கிரமாதித்தனாய் இருக்கக் கூடும். ஆனால், வென்ற நாடுகளுள் வத்தவநாடு ஒன்று என்று குறிக்கப்படுகிறது.

விருதராசபயங்கரன் முன்னொர் நாள் வென்றசக்கரக் கோட்டத்திடை

(கலிங்கத்துப் பரணி 6 -14)

‘வளவர்பிரான் திருப்புருவத்

தனுக்கோட்டம் நமன்கோட்டம்

பட்டத்து சக்கரக்கோட்டம்

(கலிங்கத்துப் பரணி 10 -23)

மாறுபட்டெழு தண்டெழ, வத்தவர்

ஏறுபட்டதும்

(கலிங்கத்துப் பரணி 11 -73)

புகையெரி குவிப்ப வயிரா

(கலிங்கத்துப் பரணி 10 -71)

கரம்எரிமடுத்தும்

எனச் சயங்கொண்டாராலும்.

66

“வஞ்சனை கடந்து வயிராகரத்துக் குஞ்சரக் குழாம் பல வாரி, எஞ்சலில் சக்கரக்கோட்டத்துத் தாரா அரசனைத் திக்கு நிகழத் திறைகொண்டருளி”

“விளங்கு சயமகளை இளங்கோப் பருவத்துச் சக்கரக்கோட்டத்து விக்கிரமத் தொழிலால்”