286
அப்பாத்துரையம் - 16
“வயிராகரத்துவாரி அயிர்முனைக் கொந்தள வரசர் தந்தளமிரிய”
என்று கல்வெட்டுக்களாலும் இவை புகழப் பெறுகின்றன.
இளமைக் காலத்திலேயே ஒரு தென்னாட்டு நெப்போலிய னாக விளங்கிய இவ்வீரன் அரசியல் மேதையாகவும் இருந்தான் என்று கூறவேண்டும். ஏனெனில் பேரசனான பின் அவன் தன் வீரப் போரார்வம்,பேரவாஆகியஉட்பகைகளையே அடக்கி,தற்காப்புப் போர்களுடன் பெரிதும் அமைந்து நின்றான். அத்துடன் பேரரசின் எல்லை குறைந்தாலும் வலிமை குறையாமலிருப்பதிலும், நல்லாட்சி யமைப்பதிலுமே அவன் கண்ணும் கருத்துமாய் இருந்தான். இக்காரணங்களாலேயே சோழப் பேரரசரிடையே தலை சிறந்த பெருவீரனான முதலாம் இராசேந்திரனைத் தாண்டி வரலாற்றாசிரியர் அவனை முதலாம் இராசராசனுக்கு ஒப்பாகக் கருதியுள்ளனர்.
வீர ராசேந்திரனுக்குப் பின் அவன் மகனும் மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் மைத்துனனுமான அதிராசேந்திரனே அரசுரிமையைப் பெற்றாலும், அவன் முதலாண்டுக்குள்ளேயே உயிரிழந்தான். ஆகவே குலோத்துங்கன் சோழப்பேரரசுரிமை பெற்று கீழைச் சாளுக்கிய மரபிலிருந்த இரண்டாம் இராசேந்திரன் என்ற பெயரை மாற்றிக் குலோத்துங்கன் என்ற பெயருடன் ஆட்சி தொடங்கினான். அவன் ஐம்பதாண்டுக்கால ஆட்சியே (1070 - 1120) சோழப்பேரரசு அமைதியும் வலிமையும் ஒருங்கே பெற்றிருந்த நடுக்காலமும் பொற்காலமும் ஆகும்
என்னலாம்.
சோழ சாளுக்கியப் போட்டி 1075 -6: நங்கிலி, மணலி, அளத்தி, நவிலை, துங்கபத்திரைச் செங்களப் போர்கள்
கீழைச் சாளுக்கியரும் சோழரும் முன்னிலும் இணக்கமாக ஒன்றுபடுவது காணப் பொறுக்காமல், மேலைச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் சோழர் மீது தாக்குதல் எண்ணத்துடன் ஐந்தாண்டுகளாகப் பெரும்படை திரட்டி வந்தான். சோழனும் அதனை அறிந்து தன் படைகளைச் செப்பம் செய்துவந்தான்.
நங்கிலிப்போர் 1075: இச்சமயம் மேலைச் சாளுக்கியப்