பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

(287

பேரரசு இருபிளவாகியிருந்தது. வடதிசையில் ஆகவமல்லன் முதற் புதல்வனான இரண்டாம் சோமேசுவரனும், தெற்கே அவன்

ளவலான ஆறாம் விக்கிரமாதித்தனும் ஆண்டுவந்தனர். இருவரிடையேயும் நல்லுறவு இல்லாததறிந்து, குலோத்துங்கன் மெல்லச் சோமேசுவரனைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். ஆனால், விக்கிரமாதித்தன் பக்கம் அவன் இளவல்களான சயசிம்மனும் விசயாதித்தனும் இருந்தனர். அத்துடன் கோவாவிலிருந்து கொண்டு கொண்கான முழுதும் ஆண்ட கடம்பகுல மன்னன் சயகேசியும், ஹொய்சள அரசன் விசயாதித்தனும் அவன் மகன் எறெயங்கனும், உச்சங்கியிலிருந்து கொண்டு நுளம்பவாடியை ஆண்ட பாண்டியன் திரிபுவன மல்லனும், வட திசையில் தேவகிரியாண்ட யாதவமன்னன் இரண்டாம் சேவுணனும் விக்கிரமாதித்தனையே ஆதரித்தனர்.

நங்கிலி என்பது மைசூரில் கோலார் வட்டத்திலுள்ளது.

இப்போரில்சோழனுக்கு உதவிய இரண்டாம் சோமேசுவரன் தன் உடன் பிறந்தானிடம் சிறைப்பட்டான். விக்கிரமாதித்தன் அவன் நாட்டையும் தன் நாட்டுடனே சேர்த்துக் கொண்டான். இச்செயல் பின்னாட்களில் சாளுக்கியப் பேரரசை மீண்டும் வலுப்படுத்த உதவிற்று. ஆயினும் நங்கிலிப் போரில் சாளுக்கியர் அடைந்த தோல்வியை இது ஈடுசெய்ய வில்லை. சோழர் பெரு வெற்றி எய்தினர். தோற்றோடிய சாளுக்கியரைத் துங்கபத்திரை கடந்தும் துரத்திக் கொண்டு சென்று மீண்டும் பல போர்களில் முறியடித்தனர்.

கங்கவாடி முழுவதும் சோழர் கைவசமாயிற்று.

மணலிப்போர்: தோற்றோடிய சாளுக்கியர் இங்கே மீண்டும் தோல்வியுற்றனர்.

அளத்திப்போர்: இங்கும் சோழரே பெரு வெற்றிகொண்டு, சாளுக்கியர் யானைகள் பலவற்றைக் கைக்கொண்டனர்.

தளத்தொடும் பொரு தண்டு எழப் பண்டு ஓர்நாள்

அளத்திபட்டது அறிந்திலை, ஐயநீ?

என்று சயங்கொண்டாரும்,

(கலிங்கத்துப் பரணி 11:74)