பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




288

அப்பாத்துரையம் - 16

'அளத்தியிலிட்ட களிற்றினது ஈட்டமும்’

என்று குலோத்துங்கன் மெய்க் கீர்த்தியும் இப்போருக்குச் சான்று பகர்கின்றன.

நவிலைப்போர்: இங்கும் சோழர் வெற்றிபெற்று ஆயிரக் கணக்கான யானைகளைப் பெற்றனர்.

'தண்டநாயகர் காக்கும் நவிலையில்

கொண்ட ஆயிரம் குஞ்சரம் அல்லவோ?'

(கலிங்கத்துப் பரணி 11:75)

துங்கப்பத்திரைச் செங்களப்போர்: இப்போரில் விக்கிர

மாதித்தனும் அவன் தம்பி சயசிம்மனும் ஓடி ஒளிந்தனர்.

துங்கபத்திரைச் செங்களத்திடைச்

சோழசேகரன் வாள்எறிந்தபோர்

வெங்கதக் களிற்றின் படத்தினால்

வெளியடங்கவே மிசைக்கவித்துமே

(கலிங்கத்துப் பரணி 4- 7)

என்று இப்போரைச் சயங்கொண்டார் பாடியுள்ளார்.

இப்போரால் கங்க மண்டலத்துடன் கொண்கானமும் (சிங்கணமும்) சோழப் பேரரசில் நிலையாகச் சேர்ந்தது.

இப்போர்களினால் சோழப் பேரரசு புகழும் செல்வமும் பெற்றது. ஆட்சியெல்லையும் ஒரு சிறிதே விரிவடைந்தது. ஆனால், சோமேசுவரன் ஆண்ட பகுதியையும் பெற்றதன் மூலம் விக்கிர மாதித்தன் தன் வாழ்வைப் பெருக்கிக் கொள்ள முடிந்தது.

சோழ பாண்டியப் போட்டி : 1081 : செம்பொன்மாரிப்

போர்

முதலாம் இராசேந்திரன் பாண்டி நாட்டில் செய்த ஏற்பாட்டின் படி அவன் மகன் சடையவர்மன் சுந்தரசோழ பாண்டியன் 1042 வரையிலும், அதன் பின் அவன் பிள்ளைகள் இருவரும் பேரனும் சோழ பாண்டியராக இருந்து பாண்டிய நாட்டை ஆண்டனர். ஆனால், குலோதுங்க சோழன் ஆட்சித் தொடக்கத்தில் சோழப் பேரரசில் உள்நாட்டுக் குழப்பநிலை ஏற்பட்டிருந்ததால், அதனைப் பயன்படுத்திப் பாண்டிய மரபினர் ஐவர் நாட்டைக்