பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

293

இரண்டாம் கலிங்கத்துப் போரில் சோழர் பக்கமிருந்து வெற்றியில் பங்கு கொண்டவனா யிருத்தல் கூடும்.

அனந்தவர்மன் எவ்வளவு நாள் சோழருக்கு வணங்கி

நடந்தான் என்பது தெரியவரவில்லை.

ஈழவிடுதலை: 1073: அனுராதபுரம் போர் II,III

பொலன்னருவாப் போர்

குலோத்துங்கன்

ஆட்சித்

தொடக்கத்துக்குரிய

குழப்பத்தைப் பயன்படுத்தி ஈழநாட்டார் ரோகணத்தில் ஆண்ட விசயபாகுவை இலங்கை முழுமைக்கும் அரசனாக்கினார்கள்.

அனுராதபுரப் போர் II

இதில் சோழர் படையெடுத்துச் சென்று யெடுத்துச் சென்று போரிட்டு விசய பாகுவை வென்று அந்த நகரத்தைக் கைப்பற்றினர். விசயபாகு பொலன்னருவாவுக்குச் சென்றபோது சோழர் அங்குச் சென்று அவனைத் துரத்தினர். வேறு நகரங்களில் பதுங்கியிருந்து படை திரட்டிக்கொண்டு விசயபாகு மீண்டும் படையெடுத்தான்.

பொலன்னருவாப் போர்

பொலன்னருவாவில் உக்கிரமான போராட்டம் நடை பெற்றது.முடிவில் விசயபாகு வெற்றி பெற்றான். பெற்றதும் அவன் அனுராதபுரத்தைத் தாக்கினான்.

அனுராதபுரப் போர் : III

விசயபாகுவின் படை இங்கே இறுதியாகச் சோழர் படையை முறியடித்துத் துரத்திற்று. விசயபாகு ஈழநாடு முழுமைக்கும் அரசனானான். சோழர் இலங்கையை நிலையாக இழந்தனர். ஆனால், குலோத்துங்கன் புதிய ஈழ அரசனுடன் நேச உடன்படிக்கை செய்து கொண்டு, தன் புதல்வியருள் ஒருத்தியான சூரியவல்லியை விசயபாகுவின் புதல்வனுக்கு மணஞ்செய்வித்தான் என்று தெரிகிறது.