294
கங்கவாடி இழப்பு : 1116
அமர்த்தப்பட்டிருந்தான்.
அப்பாத்துரையம் - 16
தகடூரிலிருந்து ஆண்ட கொங்கு நாட்டின் குடி மன்னனான அதிகமானே சோழரால் கங்க நாட்டுக்கும் பிரதிநிதியாக 1116-ல் ஹொய்சள மன்னன் பிட்டிகவிஷ்ணு வர்த்தனனின் தண்ட நாயகனான கங்கராசன் அதிகமாலைப் போரில் வென்று கங்கவாடியைக் கைப்பற்றிக் கொண்டான். ஹொய்சள மன்னனும் இது முதல் தலைக்காடு கொண்ட ஹொய்சௗன் என்று விருதுப்பெயர் சூட்டிக் கொண்டான். இவ்வெற்றி மூலமே இதுவரை கிட்டத்தட்டக் குடி மன்னனாயிருந்த ஹொய்சௗன் இப்போது வலிமையுடைய முடியரசனாகத் தொடங்கினான்.
தும்மேப் போர் : 1117
பேரரசுகளின் போட்டிக் கிடையே ஹொய்சள அரசு மெல்ல வளரத் தொடங்குவதை நாம் இப்போது காண்கிறோம். ஹொய்சளன் பிட்டிக விஷ்ணுவர்த்தனன் சோழரை எதிர்த்தது போல விக்கிரமாதித் தனைக் கூட எதிர்க்க முயன்றான். ஆனால், இரு பேரரசுகளை ஒருங்கே பகைப்பது தவறு என்று கண்டு பணிந்தான். ஆனால், அண்டை அயல் அரசுகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்த அவன் தயங்கவில்லை.
தும்மேப் போரில் அவன் உச்சங்கியிலாண்ட நுளம்ப பாண்டியனான திரிபுவனமல்லனை முறியடித்தான். உச்சங்கி இவ்வாறு அவன் கைப்பட்டது. இது கடம்பர் பகைமையை அவனுக்குத் தந்தது. ஆயினும் அப்போட்டியைச் சமாளித்து ஒரு தலை முறைக்குள் (1137-க்குள்) அவன் கங்கவாடி, உச்சங்கி, ஹாங்கல் ஆகிய பகுதிகளுக்கு அரசனானான்.
வேங்கை நாடு இழப்பு 1118
வேங்கை நாட்டில் குலோத்துங்கன் தன் பிரதிநிதிகளாகத் தன் மக்களுள் ஒவ்வொருவரை அனுப்பியே ஆண்டு வந்தான்.வட எல்லையில் வேங்கைநாட்டைக்காக்கவே இருகலிங்கப்போர்களும் எழுந்தன என்னலாம். 1118-க்குப் பின் குலோத்துங்கன் வேங்கை நாட்டைத் தானே வைத்துக் காக்க விரும்பாமல், முதலாம் கொண்கன் புதல்வன் சோடன் என்ற ஒரு தெலுங்குச்