பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

295

சோழனிடமே அதை விட்டுவிட்டான். அந்த ஆண்டே விக்கிரமாதித்தன் அதைக் கைப்பற்றித் தனக்குட்பட்ட அரசாக்கினான்.

முதலாம் குலோத்துங்கன் வெளிநாட்டுத் தொடர்பு

இலங்கை, கங்கவாடி, வேங்கை நாடுகளைக் குலோத்துங்கன் மனமார விட்டுக் கொடுத்தே இழந்திருக்க வேண்டும் என்று எண்ண இடமுண்டு. இராசராசன் காலத்திலிருந்து சோழர் தம் ஆட்சி எல்லையையே ஒரு தமிழகம் கடந்த புதிய தேசீய எல்லையாக்க அரும்பாடுபட்டனர். அதில் அவர்கள் அடைந்த வெற்றியின் அளவே இன்றைய இந்திய மாநிலத் தேசியத்தின் அளவாகும் ஆனால், கங்கை வெளியில் பரவிய அளவு தெக்காணப் பகுதியில் சோழர் வெற்றி தென்னாட்டின் வட மேற்குப் பகுதியான மேலைச் சாளக்கியரின் குந்தள நாட்டையும், அதன் அருகேயுள்ள கீழ்கரை வேங்கை கலிங்க நாடுகளையும் பாதித்தன. இந்நிலையில் குலோத்துங்கன் தன் பேரரசின் எல்லையைத் தேசீய எல்லையிலேயே பேரரசெல்லையைக் குறுக்கி, அதைத் தற்காலிகமாக ஒரு தமிழக வல்லரசாக்க எண்ணியிருக்கக் கூடும் என்னலாம். ஏனென்றால் ஆட்சியிறுதிக் காலத்தில் தமிழகத் தேசிய எல்லையாக்க முடியாமல் கெமால் பாஷதடிவஙப் பேலத் தேசிய எல்லைக்கு வெளியே யுள்ள ஆட்சிப்பகுதியில் அவன் வீரமும் வீம்பும் காட்டாமல், அவற்றை மெல்லக் கை நெகிழவிட்டான். ஆனால், இதனால் பேரரசு வலிமையோ புகழோ சிறிதும் குறைபடவில்லை என்பதைப் பிற்கால இலக்கியங்களின் பெருமிதத் தொனியேகாட்டும். உண்மையில் பேரரசின் குறுக்கத்துக்குப் பின்னரே நாம் இந்தப் பெருமிதத் தொனியைக் காண்கிறோம் என்னலாம். புவிப் பேரரசரைக் கவிப் பேரரசர்கள் பாடிய காலம் குலோத்துங் கனுக்குப் பிற்பட்ட காலமே.

குலோத்துங்கன் வெளிநாட்டுத் தொடர்புகளிலேயும் நாம் இந்தப் புதுத் தத்துவத்தின் தடத்தை காண்கிறோம். நிலங்கடந்தும், கடல் கடந்தும் முற்பட்ட சோழப் பேரரச புற உலகில் நிறுவிய பேரரசு மதிப்பைவிட, தமிழகப் பேரரசனாக நின்ற குலோத்துங்கன் மதிப்பு மிகப் பெரிது என்பதை

வை