ட
தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
ரு
297
ஆட்சி காட்டுகிறது. 1090-ல் இராச வித்தியாதர சாமந்தன், அபிமான துங்க சாமந்தன் என்ற இரு தூதரைக் கடாரத்தரசன் குலோத்துங் கனிடம் அனுப்பினான். நாகப்பட்டினத்தில் இருந்த இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திரப் பெரும்பள்ளி என்ற இரண்டு புத்தப் பள்ளிகளுக்கும் முன்பு அளிக்கப்பட்ட மானியங்களை உறுதி செய்து தரும்படி கடாரத்தரசன் கோரியபடி குலோத்துங்கன் செப்பேடுகள் வழங்கினான். மேலும் இங்கே இராசேந்திரப் பெரும்பள்ளி என்பது, முன்பு இரண்டாம் இராசேந்திரனாயிருந்தகுலோத்துங்கன் உதவிக்கு நன்றி யறிதலாகக் கடராத்தரசன் கட்டியதேயாகும் என்பது கவனிக்கத்தக்கது.
கடார வெற்றிக்குப் பின் குலோத்துங்கன் தென் கிழக்காசியா வெங்கும் சுற்றுப் பயணம் செய்திருக்க வேண்டும். அவன் காம்போச நட்பு இதன் சின்னம் ஆகும்.
(4) இந்து சீனா : காம்போசம்
காம்போச அரசன் குலோத்துங்கனுக்கு அனுப்பித் தந்த கல் ஒன்று சிதம்பரம் கோயிலில் பதிக்கப் பெற்றுள்ளதை அங்குள்ள ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
ல்
காம்போச நாட்டில் இந்நாளில் ஆண்ட ஜயவாமன், ஹர்ஷ வர்மன் என்ற அரசருள் தென் பகுதியை ஆண்ட ஹர்ஷவர்மனே குலோத்துங்கனுடன் தொடர்பு கொண்டவன் என்று கருதப்படு
கிறது.
(5) சீனம்
கடாரத்திலிருந்தே குலோத்துங்கன் சீனருடன் தொடர்பு கொண்டிருந்தான் என்று கருத இடமுண்டு. சோழப்பேரரசனான பின்னும் 1077-ல் பேர் அடங்கிய ஒரு தூதுக்குழுவை அவன் சீனப்பேரரசுக்கு அனுப்பினான் என்று தெரிகிறது. இது சீனவரலாறு தரும் தகவல்.
இவ்வுலகத் தொடர்புகள்,கங்கத்தகர்த்தல், நாடடின் முழுநில அளவை ஏற்பாடு முதலியன காண, குலோத்துங்கன் உடைய பேரரசன் என்று உறுதியாகக் கூறலாம் உண்மையில் கரிகாலன், செங்குட்டுவன், முதலாம் இராசேந்திரன் போன்ற வீரர்களையும்,