(298
|| - -
அப்பாத்துரையம் - 16
இராசராசன் போன்ற அரசியல் மேதைகளையும் கூடத் தாண்டிய உலகளாவிய பெருமையுடையவன் குலோத்துங்கன் என்னலாம்.
தமிழகத்தின் தேசியம் மிகப் பழமையானதானாலும், தத்தம் பேரவாவாலும் போட்டி உட்போட்டிகளாலும் அரசர் பேரரசர் அதைப் பெரிதும் கவனிக்காமலே இருந்தனர் என்னலாம். தமிழக மரபைக் காக்க வடவரைத் தாக்கிய செங்குட்டுவன்கூடக் குலோத்துங்கனளவு தொலை நோக்கை அவன் எழுதி வைக்க வில்லை, அவன் செயல்கள் காட்டும்!
முதற் குலோத்துங்கன் பின்னோர்கள்
-
முதற் குலோத்துங்கனுக்குப் பின் விக்கிரம சோழன் (1118 – 1136), ரண்டாம் குலோத்துங்கன் (1133-1150) 1150) இரண்டாம் - இராசராசன் (1146 - 1163), இரண்டாம் இராசாதி ராசன் (1163 1178), மூன்றாம் குலோத்துங்கன் (1178-1218), மூன்றாம் இராசராசன் (1216 - 1256), மூன்றாம் இராசேந்திரன் (1246 - 1279) ஆகிய ஏழு சோழ மன்னர் ஆண்டனர். இக்கடைசிச் சோழர்களிடையே கூடத் திறமையற்றவன் என்று கூறக் கூடியவன் மூன்றாம் இராசராசனே. மரபுத்திறத்தில் இந்த ஒரு சோடை இல்லாதிருந்தால் ஒருவேளை பேரரசு இன்னும் சிறிது காலம் நீடித்திருக்கக் கூடும். ஆயினும் மேற்கே ஹொய்சளரும் தெற்கே பாண்டியரும், வடக்கே தெலுங்குச் சோடரும் உள்நாட்டிலேயே காடவராயன் கோப்பெருஞ் சிங்கன், வாணகோவரையன், சம்புவராயன், சேதிராயன் ஆகிய சிற்றரசரும் அடைந்து வந்த வளர்ச்சி எப்படியும் சோழப் பேரரசின் தளர்ச்சியை மிகைப்படுத்துவதாகவே இருந்தது.
முதற் குலோத்துங்கன் காலத்தில் பேரரசு இழந்த இலங்கை, கங்கவாடி, வேங்கைநாடு ஆகிய மூன்று பகுதிகளில் இலங்கை தவிர மற்ற இரண்டும் தற்கால இழப்புக்களே. ஏனெனில் அடுத்த அரசன் விக்கிரம சோழன் கங்க வாடியையும் வேங்கை நாட்டையும் மீண்டும் தனக்கு உட்படுத்திவிட்டான். ஒரு முழு நூற்றாண்டுக் காலம் (1118 - 1218) பேரரசின் எல்லையும் குறைய வில்லை. உறுதியும் குலையாமலே இருந்தது. பேரரசின் எல்லை தமிழக முழுவதும் பரவியிருந்தது. பேரரசு சிற்றரசர் தயவால்