தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
299
வாழ்ந்து, பாண்டியர் ஹொய்சளர் போட்டியாலேயே பிழைத்திருந்தது. கடைசி அரசன் மூன்றாம் இராசேந்திரன் பெருவீரனாக இருந்தான். முன் ஆட்சியின் தவறுகளை அவன் ஓரளவு சரி செய்து பழயபடி சோழப் பேரரசை ஒரு வலிமை வாய்ந்தசிற்றரசாகவாவது ஆக்கமுனைந்தான். ஆனால்,பாண்டியப் பேரரசு இதற்குள் ஹொய்சள அரசையும் வென்று சோழ அரசையும் விழுங்கித் தமிழக முதற் பேரரசாகி சிற்றரசாய், பாண்டியப் பேரரசின் வயிற்றில் நிலையாக அடங்கிவிட்டது.
பிற்காலப் பாண்டியப் பேரரசு
சோழப் பேரரசின் இந்த மாலைப் போதிலே பாண்டியப் பேரரசு கருவிலடங்காத ஒரு முரட்டுப் பிள்ளையாக, சில சமயம் தனக்கே தீமை செய்து கொண்டும், சில சமயம் உரம் பெற்று வளர்ந்தும் வந்து திடுமெனப் பேரரசு நிலை எய்துவதுகாண்கிறோம்.
ரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலே, 1132-ல் பட்டம் பெற்ற பாண்டிய அரசன் மாறவர்மன் சீவல்லபன் பாண்டிய நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியதுடன் நில்லாமல், திருவாங்கூர் அரசரையும் தன் கீழ் அடக்கி மேல் உரிமை பெற்றிருந்ததாக அறிகிறோம். இவன் பாண்டியர் பேரரசு நிலையைக் காட்டும் ஒரு விடி வெள்ளி ஆவன். ஆனால், இவனுக்குப் பின் இரண்டாவது இராசாதிராசன் காலம்வரை நாம் மீண்டும் பாண்டியரைப் பற்றி மிகுதி கேள்விப்பட வில்லை.
இரண்டாவது இராசாதிராசன் காலத்தில் தொடங்கிய பாண்டிய உள்நாட்டுப் போர் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியிலேயே முடிவடைகிறது.இப்போர் காரணமாகச் சோழப் பேரரசின் புகழும் வல்லமையும் பின்னும் நீடித்தன. ஆனால், அந்த ஆட்சியிலேயே பாண்டியப் பேரரசு கரு முதிர்ச்சியடைந்து விட்டது. அடுத்த ஆட்சிக்குள் அது தமிழக முழுவதும் பரந்து அதன் எல்லையில் நின்று ஆர்ப்பரிக்கத் தொடங்கிற்று.
பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டியப் பேரரசு மீண்டும் உள்நாட்டுப் போரால் வீழ்ச்சி யடைந்தது. அதுவே வடதிசையை அலைக்கழித்த ஆப்கானிய இனத்தைத் தென்திசைக் கும் வரவழைத்தது.