300
அப்பாத்துரையம் - 16
காந்தமன் புராண மரபில் ஒரு காந்தமன் வரலாற்று மரபு
கடைச்சங்ககாலத்துக்கு முற்பட்ட ஆதி சோழருள் ஒருவன் காந்தன் அல்லது காந்தமன். அவன் குடமலையில் அடை பட்டுக் கிடந்த காவிரியை வாளால் தளைத்துத் தமிழகத்தில் ஒழுக விட்டான் என்று புராண மரபு புனைந்துரைக்கிறது. அது வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு செயலேதானோ என்று எண்ண வைக்கிறது. வரலாற்றுக் காலத்திலே அதே செயலை அதே சோழ மரபில்வந்த இரண்டாம் இராசராசன் செய்தது! இதை இலக்கிய மூலம் நாம் அறிகிறோம்.
மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வரராச ராசன்கை வாள் என்னவந்தே!
(தக்கயாகப் பரணி 549)
சுழியிட்ட காவிரிக்குச் சோணாடு வாழ
வழியிட்ட வாள் காணவாரீர்!
(இராசராச சோழனுலா 169 – 170)
என்று ஒட்டக்கூத்தர் இது குறித்துள்ளார்.
சைய
மலைச்சிறைதீர் வாள் கண்டன் வெள்ளணி நாள் வாழ்த்திக் கொலைச் சிறைதீர் வேந்துக் குழாம்
என்ற தொல்காப்பிய நச்சினார்க்கினியருரையின் மேற் கோள்பழம் பாடலடிகளும் இவ்வரலாற்று மரபே குறித்ததாதல் வேண்டும்.
'இயற்கை காரணமாகவே, படைவேந்தர் செயலாலோ காவிரி சையமலைப் பக்கம் அடைப்புண்டு, சோணாட்டு வளம் சுருங்குவதாயிற்று' என்று விளக்கம் உரைத்துள்ளனர், அறிஞர் பண்டாரத்தார். 'வாள்' கொண்டு வெட்டினான் என்ற குறிப்பு பகையரசர்செயலையே குறிப்பதாகும் என்றும் அவர்கருதியுள்ளார்.
கி.மு. 6-ம் நூற்றாண்டில் பாபிலோன் நகரத் தாக்குதலில் மீடியர் செய்த செயலை இது நினைவூட்டுகிறது.
பேரறிஞர் திருத்தந்தை ஹிராஸின் சிந்து வெளி எழுத்து விளக்கம் சரி என்று உறுதி காணப்பெறுமாயின், காந்தமன் பற்றிய மரபுரையும் ஐயாயிர ஆண்டுகட்கு முற்பட்ட ஒரு தமிழகப்