பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




302

அப்பாத்துரையம் - 16

இச்செய்திகளை அறிந்த இலங்கை வேந்தன் பராக்கிரமபாகு கடுஞ் சீற்றமடைந்தான். குலசேகரனை அழித்து, பராக்கிரமன் புதல்வன் வீரபாண்டியனையே அரசனாக்கும்படி படைத்தலைவன் இலங்காபுரனுக்கு கட்டளை பிறப்பித்தான்.

மாதண்டநாயகன் இலங்காபுரன் படைகளுடன் பாண்டி நாடெங்கும் சூறாவளிபோலச் சுற்றித் திரிந்தான். குண்டுக்கல் என்ற மூவரணுடைய நகரைக் கைப்பற்றி அதைத் தன் மூல தளமாக் கினான். அதற்குப் பராக்கிரமபுரம் என்று பெயர் சூட்டி, அதிலிருந்து கொண்டு, குலசேகரன் ஆதரவாளர்களான நாகநாடாள்வான், சீலமேகன், நரசிங்கபிரமாதிராயன், கடக்குடராயன் ஆகியவர்களை முறியடித்தான். குலசேகரனுக்கு ஆதரவாயிருந்த நகரங்கள் பலவும் எரியூட்டப்பட்டன. குலசேகரன் அவனைத் தாக்கும்படி சுந்தரபாண்டியன், பாண்டியாதிராசன் என்ற தலைவர்களை அனுப்பினான். அவர்களை முறியடித்து இலங்காபுரன் வீர கங்கை நகரைத் தீக்கிரையாக்கினான்.

வடலிப்போர்: வடலியில் நடைபெற்ற போரில் இலங்காபுரன் குலசேகரனின் ஆதரவாளனான ஆனவந்தான்

தலைவனைக் களத்தில் முறியடித்துக் கொன்றான்.

என்ற

பராக்கிரமபுரப் போர்: குலசேகரன் திருநெல்வேலி யிலுள்ள தன் நிலைப்படைகளைத் திரட்டினான். மாவடி ராயர் உட்படத் தன் துணைவர்களான முப்பத்திரண்டு தலைவர் களையும் துணைக் கொண்டான். பராக்கிரமபுரத் தருகிலே அவன் இலங்காபுரனுடன் முப்பத்து மூன்று நாட்கள் கடும்போர் நிகழ்த்தினான். புதியதொரு பாரதப் போராக அது அந்நாளில் வருணிக்கப்பட்டது. ஆனால், போர் முடிவில் இலங்கைப் படைத் தலைவன் இலங்காபுரனுக்கே வெற்றி கிடைத்தது.

தற்கடுத்து நிகழ்ந்த மற்றொரு போரில் பாண்டியன் குலசேகரன் படையின் பெரும் பகுதியுமிழந்து களம் விட்டோடினான்.

இலங்காபுரன் எரிகாவூருக்கு நெருப்பிட்டு, தேவிப்

பட்டணத்தைக் கைப்பற்றினான்.