தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13
303
குண்டனிகாப் போர்: குண்டனிகா என்ற இடத்தில் நடை பெற்ற போரில் இலங்காபுரன் பல தலைவர்களைத் தனக்கு அடங்கிப் பணியும்படி செய்தான்.
வடமண், மேற்குடி, மணமேற்குடி, மஞ்சங்குடி ஆகிய ங்களை எரியூட்டியவாறு முன்னேறினான்.
அமராவதிப் போர்: அமராவதியில் நடைபெற்ற போரில் குலசேகரனுக்கு உதவியாகக் கொங்கு நாட்டிலுள்ள அவன் மாமன் படைகளும், சேரன் படைகளும் போரிட்டன. பல நாட்கள் நடந்த இந்தப் போரில் தொடக்கத்தில் குலசேகரன் பக்கமே வெற்றி சாய்வதுபோல் தோன்றிற்று. ஆனால், இறுதியில் இலங்காபுரனே அவன் படைகளையும் அவன் ஆதரவாளர் படைகளையும் சிதறடித்தான். குலசேகரன் உயிரைக்காக்க ஓடி ஒளிந்தான்.
இலங்காபுரன் நெட்டூரில் பாளையமிட்டிறங்கினான். ங்கிருந்து பொதிகைமலைப் பக்கம் பதிவிருந்த பராக்கிரமன் புதல்வன் வீரபாண்டியனைத் தருவித்து, அவனுடன் மதுரை நோக்கிச் சென்றான். மதுரை எளிதில் அவன் கை வசப்பட்டது. அவன் வீரபாண்டியனையே அரசனாக முடிசூட்டினான்.
ய
அதுமுதல் சில நாட்கள் பாண்டிய நாட்டாட்சி இலங்கைப் படைகளின் ஆட்சியாயிற்று. எங்கும் இலங்கை நாணயமாகிய காகபணமே செலாவணியாயிற்று. இலங்கை வேந்தன் ‘பாண்டிய விஜயன்' என்ற பட்டம் தாங்கி அவ்வெற்றிச் சின்னமாக இலங்கை யில் ‘பாண்டு விஜயம்' என்ற ஊர் நிறுவினான்.
பாண்டி நாட்டின் பெரும் பகுதியை நாட்டுப் பெருந்தலைவர்களுக்கே விட்டுத்தந்து இலங்காபுரன் அவர்கள் ஆதரவைப் பெற்றான்.ஆனால், குலசேகரன் படையெடுத்தபோது இத்தலைவர்கள் அவனுடன் சேர்ந்து கொண்டனர். இலங்கைப் படை வீரரிடம் பாண்டிய நாட்டு மக்கள் கொண்ட வெறுப்பே இதற்குக் காரணம் என்னலாம். புதிய வலிமைபெற்ற குலசேகர பாண்டியன் இலங்கைப் படைத்தலைவன் இலங்காபுரன் இலங்கை வேந்தனுக்கு நிலைமை யறிவித்து, மேலும் உதவிப் படை கோரினான். இலங்கை யரசன் தண்டநாயகன் ஜகத்விஜயனுடன் மற்றொரு படை அனுப்பினான். இலங்கைப் படைத்தலைவர்