பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




304

அப்பாத்துரையம் - 16

இருவரும் சேர்ந்து மீண்டும் குலசேகரனைத் துரத்தி விட்டு, வீர பாண்டியனைத் தவிசேற்றினர்.

குலசேகரன் துணையற்ற தொண்டைமான் கோட்டை, சாந்தனேரிக் கோட்டை ஆகிய இடங்களில் திரிந்து இறுதியில் சோழன் இராசாதிராசனை அடைந்து தனக்கு உதவும்படி வேண்டினான். சோழன் வேண்டுகோளை ஏற்று, திருச்சிற்றம்பல முடையான் பெருமான் நம்பி பல்லவராயன் என்ற தன் படைத்தலைவனை ஒரு படையுடன் குலசேகரனுக்கு உதவும் படி அனுப்பினான்.

தொண்டிப் போர் : பாசிப்பட்டணம் போர்:

இந்த இரு போர்களிலும் சோழப் படைத்தலைவன் பல்லவ ராயன் இலங்கைப் படைகளை முறியடித்தான். இலங்கைப் படைத் தலைவர் இருவர் தலைகளையும் வெட்டி, மதுரைக் கோட்டை வாயிலில் யாவரும் காணக் கட்டித் தூக்கினான். பின் தலைவன் பல்லவராயன் சோழ அரசன் கட்டளைப்படி குலசேகரனையே பாண்டிய நாட்டின் அரசனாக மதுரையில் முடிசூட்டினான்.

பேராவலும் பேரார்வமும் உடைய இலங்கை வேந்தன் க பராக்கிரமபாகு இச்செய்திகளைக் கேட்டுக் கடுஞ்சினம் கொண்டான். அவன் உடன் தானே தமிழகத்தின் மீது படை யெடுக்கத் திட்டமிட்டான். ஈழ நாட்டிலுள்ள ஊராத்துரை, புலைச்சேரி, மாந்தோட்டம், வல்லிக்காமம், மட்டிவாழ் முதலிய துறைமுகப் பட்டினங்களிலே படைகளைக் குவித்தான். அவற்றைத் தமிழகம் கொண்டுவரக் கப்பல்களுக்கும் திட்டம் செய்தான்.

இத்திட்டங்களை உணர்ந்த சோழன் எதிர்த் திட்டங் களிட்டான். ஈழநாட்டு அரசுரிமை கோரிப் பராக்கிரமபாகுவுடன் போட்டியிட்ட அவன் மருமகன் சீவல்லபன் சோழனிடம் உதவி வேண்டிச் சோணாட்டிலேயே தங்கியிருந்தான். அண்ணன் பல்லவராயன் என்பவன் அறிவுரைப்படி சோழன் சீவல்லபனுடன் ஒரு பெரும் படையை இலங்கைக்கு அனுப்பினான். அப்படை ஈழத் துறை முகத்தில் இருந்த கப்பல்களையும் படைகளையும் அழித்து நாடெங்கும் சூறையாடிற்று. கைக்கொண்டு, படைத்