பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




306

அப்பாத்துரையம் - 16

சென்று பணிந்து, தந்தையிழந்த அரசுரிமையைத் தனக்கு மீட்டுத் தரும்படி வேண்டினான். வீரபாண்டியன் நன்றிக் கேட்டால் அவன் மீது சீற்றங்கொண்டிருந்த சோழன், தன்படைத் தலைவனான அம்மையப்பன் இராசராச சம்புவராயனை அழைத்து, வீர பாண்டியனை ஒழித்து அவனையே மதுரையில் முடி சூட்டி வரும்படி ஏவினான். சோழர் பாண்டி நாட்டின் மீது படை யெடுத்தனர்.

திருவேடகப் போர் 1180

வீரபாண்டியன் திருவேடகத்தில் சோழர் படையை திர்த்தான். இலங்கை வேந்தனும் அப்போரில் அவனுக்கு உதவியாக இலங்கைப் படைகளை அனுப்பியிருந்தான். இப்போரில் பாண்டி நாட்டில் ஏழகப் படைகளும் மறவர் படைகளும் வியத்தகு வீரசூரச் செயல் களாற்றி முழுமுச்சுடன் போர் செய்து அழிந்தன. இலங்கைப் படைகளோடு இலங்கைக்கு அடித்துத் துரத்தப்பட்டன. பாண்டிய இளவரசன் ஒருவன் போரில் கொல்லப்பட்டான்.அண்ணன் சம்புவராயன் மதுரையும் அரசும் கொண்டு வெற்றித் தூண் நிறுவி விக்கிரம பாண்டியனைப் பாண்டி நாட்டின் அரசனாக்கினான்.

நெட்டூர்ப் போர் 1188

முடியிழந்த வீர பாண்டியன் கேரள அரசன் உதவியுடன் மீண்டும் பாண்டி நாட்டின் மீது படையெடுத்தான். நெட்டூர் என்னுமிடத்தில் சோழர் படைக்கும் அவனுடன் வந்த சேரர் படைக்கும் போர் நிகழ்ந்தது.

நெட்டூர் என்பது தற்போதைய இராமநாதபுர மாவட்டத்தில் சிவகங்கை வட்டம் சார்ந்த இளையான்குடிக்கு அருகில் உள்ளது.

இப்போரில் வீர பாண்டியன் படையும் சேரநாட்டுப் படையும் முற்றிலும் தோல்வியுற்று அழிந்தன. சேரன் சோழ போரில் வாகை சூடியதுடன், பாண்டியருக்கு வழி வழி உரிமையாயிருந்த முடியைக் கைப்பற்றினான். வீரபாண்டியன் பட்டத்தரசி சிறைப்பிடிக்கப்பட்டு வேளம் ஏற்றப்பட்டாள்.