பக்கம்:அப்பாத்துரையம் 16.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தென்னாட்டுப் போர்க்களங்கள் - 13

307

வீர பாண்டியன் மீண்டும் சேரனிடம் அடைக்கலம் புகுந்தான். ஆனால், சோழர் பகையினும் நட்பே சிறந்ததென்று கொண்டு, சேரன் வீர பாண்டியனையும் அவன் புதல்வர் இருவரையும் அழைத்துக் கொண்டு அவனிடம் ஓப்படை கோரினான். சோழன் அவர்களை மதித்து ஆதரவு காட்டினான். வீரபாண்டியனுக்குப் பாண்டி நாட்டின் ஒருபகுதி கொடுத்து ஆளச் செய்தான். சேரன் நன்னம்பிக்கையையும் பாராட்டி அவனுக்கும் பரிசில்கள் வழங்கினான்.

ஈழநாட்டுப் படையெடுப்பு 1188

பாண்டியனுக்கு உதவியதற்காக ஈழ அரசன் மீது வெகுண்டு மூன்றாம் குலோத்துங்கன் ஈழத்தின் மீது படையெடுத்தான். அவன் பெற்ற வெற்றிகள் பராக்கிரமபாகுவுடன் மதிப்பான தொடர்புடன் மீளப் போதியவையாயிருந்தன.

கொங்கு வெற்றி 1194

கொங்கு நாட்டைச் சோழர்கீழ் கொங்குச் சோழர் ஆண்டு வந்தனர். சோழன் இரண்டாம் இராசாதிராசன் காலத்தில் அவர்கள் சோழருக்குத் திறை செலுத்துவதை நிறுத்தித் தன்னுரிமை பெற முயன்றிருந்தனர். மூன்றாம் குலோத்துங்கன், கொங்கு நாட்டின் தலை நகரான கரூர்மீது படையெடுத்து, அதைக் கைப்பற்றினான். அவ்விடத்திலேயே சோழ கேரளன் என்ற பட்டம் மேற்கொண்டு அவ்வகையில் சிறப்பு முடி சூட்டிக் கொண்டான்.

தெலுங்குச் சோடர்

நெல்லூர், கடப்பை சித்தூர்ப் பகுதிகளில் ஆண்ட தெலுங்குச் சோடர்கள் சோழப் பேரரசின் மாலைப்போதில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக வளர்ந்தார்கள். ஆனால்,, அவர்கள் எப்போதும் சோழருக்கு நண்பர்களாகவே ருந்ததுடன், சோழருக் கெதிராக அடிக்கடி கிளர்ந்தெழுந்து தால்லை தந்த சம்புவராயர், காடவராயர், சேதிராயர் ஆகியவர்களிடமிருத்து சோழ அரசனைக் காத்தனர். மூன்றாம் குலோத்துங்கசோழன் வலிமை வாய்ந்த அரசனே யானாலும்